குழப்பத்தின் கோரப்பிடியில் ராதாமோகன்

‘பயணம்’ படத்துக்குப்பின் ஒரு நீண்ட ஓய்வை எடுத்துவிட்டு, தனது அடுத்த படத்துக்கான பயணத்தை துவங்கிய இயக்குனர் ராதாமோகன்,முதலில் நாகார்ஜுனாவின் வாரிசு நாக சைதன்யாவையும் சரத்குமாரின் மகள் வரலட்சுமியையும் வைத்து படம் இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். படத்தின் டைட்டில் ‘கவுரவம்’. முந்தைய ‘பயணம்’ போலவே, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படவிருந்த அந்தப்படத்தை நாகார்ஜுனாவே தயாரிப்பதாக இருந்தது.

பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை, படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளரும் மாறினார்கள்.படத்தயாரிப்பு வேலையை பிரகாஷ்ராஜ் ஏற்றுக்கொள்ள, பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்துவின் இளைய மகன் அல்லு சிரிஷ் ஹீரோவாக முடிவு செய்யப்பட்டார்.

தற்போது கவுரவுத்துக்கான ஹீரோயின் வேட்டை தீவிரமாக நடந்து வரும் வேளையில், தமிழ்-தெலுங்கு இரு மொழிப்படம் என்பதால் அமலாபால்,நித்யாமேனன், ப்ரியா ஆனந்த் ஆகியோர் மத்தியில் பெரும் போட்டி நிலவுகிறதாம்.