மோகன்லாலும் கமலஹாசனும் சேர்ந்துவந்தால் திருவோணம்

kaml

கேரளாவில் ஏதாவது திரைப்பட விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதெல்லாம், துவக்க காலத்தில் தன்னை வளர்த்துவிட்ட, மலையாளப் படங்களில் தொடர்ந்து நடிக்க முடியவில்லையே என்ற தனது ஏக்கத்தை மேடைப்பேச்சுக்களில் கமல் கொட்டிவிட்டு வருவதும், அதனை ஒட்டி தன்னைத்தேடி வரும் மலையாள ஸ்கிரிப்டுகளை சம்பளம் கட்டுபடியாகாது என்ற ஒரே காரணத்துக்காக புறந்தள்ளுவதும் பல காலமாக நடந்துவரும் கதாகாலட்சேபம்.

இதன் தொடர்ச்சியாக, இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் மோகன்லாலும், கமலும் இணையும் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தை,ஏறத்தாழ படம் ஓ.கே. ஆகிவிடும் நிலையை எட்டி இருக்கிறது.

பிரபல எழுத்தாளர் எம்.டி. வாசுதேவநாயரின்’ ரெண்டாம் மூலம்’ நாவலை அதே பெயரில் திரைக்கதையாக எழுதிவரும் ஹரிஹரன்,’’ இந்தப்படத்தை வெறுமனே மலையாளத்தில் மட்டும் எடுப்பதாக இருந்தால் கமலை அணுகியிருக்க மாட்டோம். தமிழ், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் இதனை எடுக்கவிருப்பதால் கமல், மோகன்லால் கூட்டணி இருந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தோம்.
நாவலாசிரியர் வாசுதேவநாயரின் தீவிர ரசிகரான கமல் தனது முடிவை விரைவில் அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்’ என்கிறார்.

ஒரு வல்லிய சம்பளம் பறஞ்சால், கமல் இம்மீடியட்டா சம்மதிக்கான் மதி. கேட்டோ ஹரி சேட்டன் ?