’ஜீவாதான் என் டார்லிங், மிஷ்கின் எனக்கு சித்தப்பா மாதிரி’ – பூஜா ஹெக்டே

‘ப்ளீஸ் என்னைப்பத்தி ஏதாவது கிசுகிசு எழுதிக்கிட்டே இருங்கப்பா’ என்று ‘அம்மா தாயே’ ரேஞ்சுக்கு கெஞ்சுகிறார், மிஷ்கின் – ஜீவா கூட்டணி போட்டுவரும் ‘முகமூடி’யில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே.

மங்களூர் தக்காளியான, இந்த பூஜா கடந்த ஆண்டு மிஸ் இண்டியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.’’ அப்படி ஒரு அங்கீகாரம் கிடைப்பதற்கு முன், நடிகையாகவோ, மாடலாகவோ ஆகிவிட மாட்டோமா என்று பல இடங்களுக்கு நாயாய் பேயாய் அலைந்தேன். ஒருத்தரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. பின் மிஸ் இண்டியா பட்டம் வென்றவுடன் கன்னாபின்னாவென்று வாய்ப்புகள் வந்தன. அத்தனையையும் உதாசீனப்படுத்திவிட்டு நல்ல வாய்புக்காக காத்திருந்தபோதுதான் ‘முகமூடி’ பட வாய்ப்பு வந்தது. அப்படியே லபக்கென கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.’’

டைரக்டர் மிஷ்கின் கூட ரொம்ப நெருக்கமா பழகுற மாதிரி செய்திகள் கசியுதே ?

கிசுகிசுவுலயும் கூட ஒரு நேர்மை, நியாயம் வேணும். மிஷ்கினுக்கும் எனக்கும் ஒரு ஜெனரேசன் வயசு வித்தியாசம் இருக்கும்.அவர் எனக்கு சித்தப்பா மாதிரி இருக்கார். அவர் கூட இணைச்சிப்பேசி இந்த பிஞ்சு மனசுல நஞ்சு கலக்குறீங்களே. வேணும்னா ஜீவா கூட சேர்த்து வச்சி ஏதாவது கிளப்பி விடுங்க. அவர்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தன்னோட மனைவியை கூப்பிட்டுட்டு வராம , ஷாட் இடைவெளிகள்ல எனக்கு லவ் லுக் விட்டுக்கிட்டே இருக்கார். இணையதளங்கள்ல படிச்ச ஏ’ ஜோக்ஸை சொல்றார்’’ என்று ஜீவா குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குகிறார் முகமூடி போட்டுப்பேசத்தெரியாத பூஜா.