குழந்தைக்கு உணவை மென்று ஊட்டும் அலீஸியா சில்வர்ஸ்டோன்

alicia-silverstone-baby-1

க்ளூலஸ்(Clueless) படப் புகழ் அலீஸியா சில்வர்ஸ்டோனுக்கும் அவருடைய காதல் கணவர் க்ரிஸ்டோபர் ஜேரக்கி(Christopher Jarecki)க்கும் கடந்த 2011 மே மாதத்தில் பிறந்த ஆண் குழந்தை ‘பியர் ப்ளூ ஜேரக்கி’க்கு இப்போது பத்து மாதமாகிறது.

கருவுற்றிருந்த நேரத்திலும் இமேஜ் பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பெரிதான வயிறுடன் வலம் வந்த அலீஸியா, தற்போது தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வருகிறார்.

இவர் தன் குழந்தை க்ரிஸ்டோபருக்கு திட உணவை கொடுத்துப் பழக்குவதற்காக உணவை தன் வாயில் போட்டு நன்றாக மென்று பின் அது போதிய அளவு கூழானவுடன் எடுத்து அவன் வாயில் ஊட்டுகிறார். சமீபத்தில் தனது நண்பர்களுடனான இணையதள அரட்டையில் தான் மென்று ஊட்டுவதை பகிர்ந்து கொண்டுள்ளார்.

உடனே ஆரம்பித்தது கிரகம். இப்படி வாயில் மென்று உணவை ஊட்டுவது ஆரோக்கியக் குறைவானது என்று சேனலுக்குச் சேனல் எக்ஸ்பர்ட்டுகள் கூடி விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். அலீஸியாவோ ‘இது நம் முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்து வரும் வழக்கம். இது ஒன்றும் புதிதல்ல’ என்கிறார். அம்மாவிடம் இருந்து வரும் குழந்தை அம்மாவிடம் புதிதாக என்ன நோயைப் பெற்றுவிடப் போகிறது?

குழந்தைக்கு பால்குடி மாறுவதற்காக வேறு உணவை தாய் இப்படிக் கொடுப்பது வழக்கம் என்றும் இதை ஏன் இவர்கள் இப்படி பெரிதுபடுத்துகிறார்கள் என்று கேட்கிறார். தான் உணவை மெல்லும் போது க்ரிஸ்டோபர் உணவு வேண்டுமென்று கேட்டு தனது வாயில் கையை விட்டுக் கேட்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என அகமகிழ்கிறார் இந்த வித்தியாசமான ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி.

சிறு வயதில் எனது பாட்டி இதே போல எனது தம்பிக்கு உணவை வாயில் போட்டு மென்று கொடுத்ததை அன்றாடம் பார்த்திருக்கிறேன். alicia-silverstone-baby-2கே.எப்.சி, பர்கர் கிங் என்று நம் ஊரில் சிறுசுகள் பைத்தியம் பிடித்து அலையும் காலத்தில் இப்படியும் ஒரு ஹாலிவுட் அம்மா.