’பாலா படம் நடிக்க ரொம்ப நாளாகும்’- விஷால் நக்கல்

எங்கேயும் எப்போதும்’ பட இயக்குனர் சரவணன், இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்காக ஆர்யாவை வைத்து இயக்குவதாக இருந்த படம் டிராப்பாகியிருந்த நிலையில், இப்போது ஆர்யாவுக்கு பதில் அந்த கேரக்டரில் விஷால் நடிக்கவிருக்கிறார்.

‘ஆரம்பத்தில் கதை கேட்டு ஆர்வமாக நடிக்க ஒப்புக்கொண்ட ஆர்யா ஏன் திடீர் பல்டி அடித்தார் என்பது , இன்று வரை எனக்குத்தெரியாது. லிங்குசாமிக்கும் ஆர்யாவுக்கும் இடையில் சம்பளப்பேச்சு வார்த்தையில் தகராறு என்றார்கள். அதுகுறித்து இதுவரை லிங்குசாமியும் என்னிடம் வாயைத்திறஎது பேசவில்லை. நானும் என்ன ஏது என்று கேட்கவில்லை.

ஆர்யாவுக்கு பதில் வேறு நடிகரைப்போடுவது பற்றி விவாதித்துக்கொண்டிருந்த போது, அந்த கேரக்டருக்கு விஷால் ஓகேவா என்று சில தினங்களுக்கு முன்பு கேட்டார். எனக்கும் விஷால் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. கடந்த வாரம் விஷாலை சந்தித்து கதை சொன்னேன். கொஞ்சம் கூட அவகாசம் எடுத்துக்கொள்ளாமல், உடனே ஓகே சொன்னார். இதோ மளமளவென மற்ற நடிகர் மற்றும் டெக்னீஷியன் தேர்வுகளில் இறங்கிவிட்டோம்’ என்று ஹீரோ மாறிய கதையை சொல்லும் சரவணன், ஜூன் மாதத்திலிருந்து ஷூட்டிங் கிளம்ப உத்தேசித்துள்ளாராம்.

விஷால் தற்போது நடித்து வரும், ‘சமர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ‘சமரன்’ படத்துக்குப்பிறகு மீண்டும் பாலாவின் டைரக்‌ஷனில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அடுத்து சுந்தர். .சி யுடன் நடிக்கும் ஒரு படம் , சரவண னின் இரண்டாவது படம் என்று வரிசையாக கமிட் ஆவதைப்பார்க்கும்போது, விஷால் பாலா கூட்டணி மீண்டும் கண்ணுக்கெட்டிய தூரமரை இருக்காது என்றே தோன்றுகிறது.

இது குறித்து விஷாலிடம் கேட்டால்,’ அவரோட அதர்வா படத்தை எப்ப முடிப்பார்னே தெரியாது. அடுத்த படத்துக்கு அவரு என்னை கூப்பிடுறதுக்கு முன்னாடி ஒரு அரை டஜன் படத்தையாவது நடீச்சி முடிச்சிர மாட்டேனா’ என்று நக்கலடிகிறாராம்..