’அவ்வையார் வேஷத்துக்கு சொல்லி அனுப்புறேன்’-நயன்தாராவின் நைன் கமாண்ட்மெண்ட்ஸ்

samar-thrisha-2

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்கள் என்றாலே பரபரப்பான செய்திகளுக்கு எப்போதுமே பஞ்சமிருக்காது. ஏனெனில் அதில் பாதி செய்திகளை படத்தின் பப்ளிசிட்டி கருதி பரப்பி விடுவதே அந்த நிறுவனத்தின் முக்கிய வேலை.

அந்த வகையில், தற்போது அந்நிறுவனத்தின் தயாரிப்பிலிருக்கும்,’பூலோகம்’ படத்தைப்பற்றி நாளொரு செய்தியும், பொழுதொரு வதந்தியும் வந்த வண்ணம் உள்ளன.

எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் இயக்கத்தில், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்துக்கு ஹீரோயினாக நயன் தாரா பேசி முடிக்கப்பட்டு, அட்வான்சும் வாங்க இருந்த நிலையில்,தற்போது, நயன் தாராவுக்குப் பதில் திடீரென த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கதையைக்கேட்டு ஒப்புக்கொண்ட நயன் தாரா ஒரு பெரிய சம்பளம் கேட்டதையும் பொருட்படுத்தாது, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சம்மதித்த நிலையில், அவர் போட்ட கண்டிஷன்கள் பெரும் எரிச்சலைத் தரக்கூடியவையாக இருந்தன என்பது தயாரிப்பாளர் தரப்பு கருத்து.

தனக்கு தனி கேரவன் வேண்டும்,ஆறு உதவியாளர்கள் வேண்டும், அவர்களுக்கு தான் சொல்லும் சம்பளமும் பேட்டாவும் தரவேண்டும்.படத்தின் டான்ஸ் மாஸ்டர்களை தன்னிடம் கலந்து பேசாமல் முடிவெடுக்கக்கூடாது.தெலுங்கு ‘ராமராஜ்யம்’ படத்தில் சீதையாக நடித்த பிறகு தனது இமேஜ் புனிதமயமாகி இருப்பதால் கிளாமராக நடிக்க மாட்டேன். படத்துக்கான எனது காஷ்ட்யூம்களை நானே முடிவு செய்வேன்.. .என்பது போன்ற நிபந்தனைகளுடன் நீண்ட நயன் தாராவின் கண்டிஷன்களைக் கேட்டுவிட்டு, ‘’என்னைக்காவது அவ்வையார் கதையை படமா எடுப்பேன்,அப்ப சொல்லி அனுப்புறேன் ’என்று பதில் சொல்லி அனுப்பிவைத்தாராம் ஆஸ்கார் ரவி.

இதற்கெல்லாம் தலைகீழாக, ஒரு நிபந்தனையும் இன்றி, கதை கூட கேட்காமல் உடனே ஓ.கே சொன்னாராம் சம்திங் நாயகி.