த்ரிஷா முதிர்கன்னியாமே? ஒரு அண்ணன் கவலை

‘தினத்தந்தி’யில் படித்தேன், எனது அபிமான இயக்குனர் பாலா சொந்தமாக ‘கேரவன்’ வாங்கியிருக்கிறாராமே ? தமிழ் இண்டஸ்ட்ரியில், வேறு இயக்குனர்கள் யாராவது கேரவன் வைத்திருக்கிறார்களா?? ரவிச்சந்திரன், காஞ்சிபுரம்.

கி: என்னது பூஜா பாலா படத்துலருந்து தப்பிச்சி ஓடிட்டாரா ? ஓ… இப்ப அந்த கேரக்டர்லதான்,’அரவான்’ தன்ஷிகா நடிக்கப்போறாரா ? ஓ.கே.. ஓ.கே..

காஞ்சிபுரத்துலருந்து ரவிச்சந்திரன்னு ஒருத்தர் கேரவன் பத்தி ஏதோ கேள்வி கேக்கனும்னு ஆசைப்பட்டிருப்பாரு போல,… பேசிக்கிட்டுருக்கப்பவே லைன் பாதியில கட் ஆயிடுச்சி.

கே:ஏற்கனவே 33 வயசுக்கு மேல ஆயிடுச்சாம். இன்னும் ஏன் தன்னோட கல்யாணத்தை தள்ளிப்போட்டுக்கிட்டே போறாங்க நம்ம த்ரிஷா ? இன்னும் கொஞ்ச காலம் போனா யாரும் கட்டிக்க முன்வராம, முதிர்கன்னியாவே காலம் தள்ளிடுவாங்களோன்னு கவலையா இருக்கு ? முரளி, பெங்களூரு.

கி: இவ்வளவு அக்கறையா கேக்குறதுனால, நீங்க ஒரு முதிர்கன்னனா இருக்க வாய்ப்பு இருக்குங்கிற அடிப்படையில சொல்றேன். இதே கேள்வியோட உங்க மாமியார், அதாங்க த்ரிஷாவோட அம்மா மனசைத்தட்டுங்க.அப்பவாவது ஒரு முதிர்கன்னிய காப்பாத்த முடியுதான்னு பாப்போம்.

கே: பதினோரு வருஷ கேப்புக்கு அப்புறம் படம் இயக்க வந்திருக்காரே ‘தினந்தோறும்’ நாகராஜ், இந்த இடைவெளியில என்னதான் பண்ணிக்கிட்டிருந்தார்? கணேஷ்,திருநெல்வேலி.

நல்ல கதைக்காக காத்திருந்தார்னு நானும் சொல்லமாட்டேன், நாகராஜும் சொல்லமாட்டார்.டைரக்டர் மகேந்திரன் நல்ல படங்கள் எடுத்து முடிச்சிட்டு குடிக்க ஆரம்பிச்சார். ‘தினந்தோறும்’ நாகராஜ் நல்ல படங்கள் எடுக்குறதுக்கு முந்தியே தினந்தோறும் குடிக்க ஆரம்பிச்சி, இவ்வளவு பெரிய இடைவெளிய ஏற்படுத்திக்கிட்டார். நாகராஜ் நல்ல சரக்குள்ள கலைஞன்.அவர்கிட்டருந்து கூடிய சீக்கிரமே ஒரு நல்ல படைப்பை எதிர்பார்க்கலாம்.

முன்பு போல் சினிமாவிலும், சீரியல்களிலும் அவ்வளவாக பார்க்க முடியவில்லையே, நடிகை சீதா என்ன செய்துகொண்டிருக்கிறார்? வாசுதேவன், தஞ்சை.

கி: ஆங்… எவ்வளவு நாளைக்குத்தான் ராமாயணத்தை மட்டுமே படிப்பீங்க என்ற பொறுமலுடன் ‘சீதாயணம்’ என்ற சுயசரிதை போன்ற ஒரு பெரும் நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார். அநேகமாக முன்னுரை கேட்டு பார்த்திபனிடம் தான் வருவாரென்று நினைக்கிறேன்.

கிளியாரின் முந்தைய பதில்கள்