என்னடி ஷோனாக்‌ஷி, சொன்னது என்னாச்சி ? ’ரவுடி லவ்வர்’ பிரபுதேவாவின் புதிய காதலி

நயன் தாராவுடனான காதலைப் புதைத்த இடத்தின் ஈரம் கூட இன்னும் காயாததால், இன்னும் கொஞ்ச நாளைக்கு, கோடம்பாக்கம் ஏரியாவில், தனது காதல் லீலைகள் எடுபடாது என்று நினைத்தோ என்னவோ, தனது மாஸ்டர் பிளானை இப்போது இந்திப்பக்கம் திருப்பியிருக்கிறார் பிரபுதேவா.

அக்‌ஷய் குமாரை ஹீரோவாகக்கொண்டு, பிரபுதேவா இந்தியில் இயக்கிக்கொண்டிருக்கும் படம்,’ரவுடி ரத்தோர்’.இதில் அக்‌ஷய்க்கு ஜோடியாக நடிக்கும் ஷோனாக்‌ஷி ஷின்ஹாதான் பிரபுதேவாவின் லேட்டஸ்ட் டார்கெட்.ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கூட ஷோனாக்‌ஷியே சொர்க்கம் என்று அவருடன் ஷாப்பிங், பீச்சிங் என்று அலைகிறாராம் மாஸ்டர்.

சத்ருகன் ஷின்காவின் மகளான இந்த ஷோனாக்‌ஷி என்ற மீனாட்சி ‘தபாங்’ என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திப்பட ரசிகர்களை தன் முந்தானைக்குள் முடிந்தவர் என்பது ஒரு உபரி தகவல்.

பொதுவாகவே பத்திரிகையாளர்களைக் கண்டாலே, பல மைல் தள்ளி ஓடும் மாஸ்டர், ஷோனாக்‌ஷியைப் பற்றி பக்கம் பக்கமாகப் பேசுகிறாராம்.

‘’ஷோனாக்‌ஷியைப்பார்த்தால் ஒரு படத்தில் நடித்த அனுபவமுள்ளவர் போலவே தெரியவில்லை. 25 படங்களில் நடித்த நடிகைக்கான அனுபவம் அவரது நடிப்பில் தெரிகிறது. டயலாக் பேப்பரை நீட்டினால், சும்மா ஒரு பார்வை பார்த்துவிட்டு,அப்படியே ஒரே டேக்கில் அசத்துகிறார். டான்ஸ் மூவ்மெண்டில், இன்றைக்கு இந்திய அளவில் நம்பர் ஒன் யார் என்றால்,நான் கொஞ்சமும் யோசிக்காமல் ஷோனாக்‌ஷியின் பெயரைத்தான் சொல்வேன்’’

என்னடி ஷோனாக்‌ஷி, சொன்னது என்னாச்சி ?இப்படிப் போகிறது மாஸ்டரின் ரூட்டு.