டாட்டுவை’ பத்தி கேட்டா காட்டு காட்டுன்னு காட்டுவேன்’’-நயன்தாரா

இவரைப்பத்தி எதுவும் எழுதாம, ஒரு வாரம் ‘ரெஸ்ட்’ விடலாமுன்னு பாத்தா, விடுறாரா? மறுபடியும் நயன் தாரா. ஒரு ரகஸிய பயணமாக, தனது மேனேஜர் ராஜேஷுடன் பாங்காக் போய்விட்டு திரும்பிய நயன் ஏர்போர்ட் அதிகார்களின் 40 நிமிட விசாரணையில் சிக்கி சின்னாபின்னமானதுதான் லேட்டஸ்ட் அண்ட் ஹாட்டஸ்ட்.

பாங்காக் விமானத்திலிருந்து நயன் இறங்கிக்கொண்டிருக்கும்போது,தனது பெயரை அறிவிக்காத ஒரு நபர், ஏர்போர்ட் அதிகாரி ஒருவருக்கு போன் செய்து,நயனின் சூட்கேஸில் ரூ.20 லட்சம் பணம் இருக்கிறது.அது எப்படி வந்தது என்று விசாரியுங்கள் என்று போட்டுவிட்டு எஸ்’ ஆகிவிட்டாராம். அதை ஒட்டி நடந்த விசாரணையில், போனில் வந்த தகவலை உறுதி செய்த அதிகாரிகள், பணம் வந்த விதம் குறித்து விசாரித்தபோது, நயனிடமிருந்து தெளிவான எந்த பதிலும் கிடைக்கவில்லையாம்.

பாங்காக்கு நயனுடன் பயணம் செய்த அவரது மேனேஜர் என்று அழைக்கப்படும் ராஜேஷ், ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கராம்.நயனுக்கு பிரபுதேவாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ராஜேஷ், நயன் – பிரபுதேவா மோதலின்போது, விவரமாக, தன்னை அறிமுகப்படுத்தியவர் என்ற எண்ணம் கூட இல்லாமல் பிரபுதேவாவை கட்’ பண்ணிவிட்டு நயனுடனேயே ’தங்கி’ விட்டாராம்.

நயன் கொண்டு வந்த பணத்தில் ராஜேஷுக்கு முக்கிய பங்கு இருக்கக்கூடும் என்று எண்ணியதால், இருவரையும் தனித்தனி அறைகளில் ‘விசாரித்த’ அதிகாரிகள், இதுவரை உள்ளே நடந்த செய்திகள் எதையும் வெளியிடவில்லை.

விசாரணை முடிந்து வெளியே வெறுப்புடன் வந்துகொண்டிருந்த நயனிடம்,ஏர்போர்ட்டில் நின்றிருந்த ஒருவர் ரொம்ப கூலாக,’’ஏன் மேடம் பிரபுதேவா டாட்டுவை அளிக்கத்தானே பாங்காக் போனீங்க’ என்றதும் பயங்கர சூடாகிப்போன நயன், ஆரம்பத்தில் சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிட்டு,ஆத்திரம் தணிந்தவுடன்,’’ டாட்டுவ பாக்கனும்னா என் ஹோட்டல் ரூமுக்கு வா. உனக்கு மட்டும் காட்டு காட்டுன்னு காட்டுறேன்’ என்றபடி காரில் ஏறி அமர்ந்தாராம்.