’மூனு மனமே மூனு’ -செட்டில்மெண்ட் கேட்கும் நட்டிகுமாரும், மெண்டல்லி செட் ஆகாத கஸ்தூரியாரும்…

ஆகாயத்திலிருக்கிற மூன் வரைக்கும் விளம்பரத்தை அடைந்த ‘3’ பட்த்தின் பஞ்சாயத்துகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. இந்த முறை ஆந்திராவில்.

சற்று முன்புதான் ‘3’ வாங்கிய தமிழ் விநியோகஸ்தர்களிடமிருந்து, தவித்து தண்ணிகுடித்து தப்பிவந்த கஸ்தூரி ராசாவை, இப்போது சில தினங்களாக நட்டு கழட்ட வந்திருப்பவர் நட்டிகுமார் என்கிற தெலுங்கு தயாரிப்பாளர்.

‘3’ படத்தின் தெலுங்கு உரிமையை 4கோடியே 35 லட்சத்துக்கு வாங்கிய இவர் ,படம் மூனு நாளிலேயே ஊத்தி மூடிக்கொண்ட்தை தொடர்ந்து, ’எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் ‘ என்ற கோரிக்கையோடு, கவுன்சில் சேம்பர் என்று பஞ்சாயத்து வைத்தால் காலதாமதமாகும் என்று முடிவு செய்து நேராக ஹைதராபாத் போலீஸில் புகார் செய்துவிட்டார். அதுவும் யார் மீது? பட இயக்குனர் ஐஸ்வர்யா மீதும், அவரது கணவர் தனுஷ் மீதும்.

இதை அறிந்து கொதித்த ஐஸ்வர்யா, மாமனாரை முறைக்க, பெரும் கலவரத்துக்கு உள்ளாகிவிட்டார் கஸ்தூரி.

‘ 3’ பட்த்தின் தெலுங்கு உரிமையை வாங்கிய நட்டி குமார் ஒரு சீட்டிங் குமார். படத்துக்கு பாதிப்பணம் மட்டுமே செலுத்திவிட்டு, மீதிக்கு செக் கொடுத்தார். அதை வங்கியில் போட்டால் ‘நோ மணி நோ மணி’ என்று உடனே ரிடர்ன் ஆகிவிடுகிறது. இந்த சூழ்நிலையில் நாங்கள் போடவேண்டிய சீட்டிங் கேஸை எங்கள் போல் போட்டுள்ளார்.

இன்னொரு புறம் ‘3’ பட்த்தின் தெலுங்கு சேடிலைட் உரிமைகளையும், எங்களுக்கு பணத்தை செட்டில்மெண்ட் பண்ணாமலேயே சட்டத்துக்கு புறம்பாக ரிலீஸ் செய்துள்ளார். விரைவிலேயே நட்டிகுமார் மீது போலிஸில் புகார் கொடுப்பதற்காக எனது வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறேன்’’அக்னி அனல் பறக்கிறது கஸ்தூரிராசாவின் பேச்சில்.

போகிற போக்கைப்பார்த்தால், நட்டிகுமாருக்கோ, கஸ்தூரியாருக்கோ படத்தில் தனுஷுக்கு வந்த அந்த என்னமோபோபியா வியாதி வந்தாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை.