அஜீத் ஆசையில் மண் அள்ளிப்போட்ட இயக்குனர் விஷ்ணு வருத்தன்

டாப் ஹீரோக்களைப் பொறுத்தவரை அவர்கள் எப்போது தேதி தருகிறார்களோ அந்தத் தேதிகளில் படப்பிடிப்பை நடத்துவதற்காக, டைரக்டர் தயாரிப்பாளர் உட்பட எல்லோரும் காத்திருப்பார்கள்.

இப்போது அடுத்து அஜீத் நடிக்கவிருக்கும் படத்தின் நிலைமை தலைகீழாக இருக்கிறதாம். ’பில்லா 2’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டார் அஜீத்.

அவரைப் பொறுத்தவரை அடுத்தபடத்தின் படப்பிடிப்புக்குப் போகத் தயார். இந்தத்தகவலை அவர் சொல்லிவிட்ட பின்பும் படப்பிடிப்புக்கான அழைப்போ ஷூட்டிங் எப்போது எனபது போன்ற விபரங்கள் அவருக்கு வரவில்லையாம். காரணம் என்னவென்று கேட்டால், …

அடுத்து அஜீத் படத்தை இயக்கப்போகிறோம், அதில் நயன்தாரா, ஆர்யாவெல்லாம் இருக்கப்போகிறார்கள் என்பதில் ஏக குஷியாகிவிட்ட இயக்குநர் விஷ்ணுவர்தன், அஜீத்திடம் சொல்லிவிட்டுச் சென்ற ஒன்லைனை அதற்கு மேற் கொண்டு இரண்டாவது மூன்றாவது லைனுக்கு எடுத்துச் செல்லவேயில்லையாம். அஜீத் ‘ பில்லா 2’ வை முடித்துவிட்டு, எப்படியும் சில மாதங்கள் ஓய்வெடுக்கப் போய்விடுவார்.அடுத்து மினி ரிலாக்ஸாய் அவர் கார் ரேசிலும் கலந்துகொள்ளக்கூடும் என்று நினைத்து அசிரத்தையாக இருந்துவிட்டார். அதனால் திரைக்கதையை முழுமையாக எழுதவில்லையாம்.

இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் ரத்னமோ அஜீத் தேதி கொடுத்துவிட்டதாலேயே தன்னுடைய கஷ்டங்கள் அவ்வளவும் தீர்ந்து மறுவாழ்வு வந்துவிட்டதாகக் கருதிவிட்டார்.அதனால்தான் அதற்காக ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அவருக்கு ஒரு கோயிலைக்கட்டி கும்பாபிஷேகம் செய்யும் வேலைகளில் பிஸியாகிவிட்டார்.

இதனால் உடனடியாகத் தொடங்கவேண்டிய படப்பிடிப்பு தள்ளிப்போய்விட்டது. ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் நிறைய படங்கள் இருப்பதால் சிக்கல் இல்லை.

அனால், வரும் தீபாவளி ரிலீஸ் ரேஸில் கலந்துகொள்ள, இன்னொரு படம் முடித்துவிடலாம் என்ற அஜீத்தின் ஆசையில்தான் மண் விழுந்து விட்டது.