பிச்சிப்புடுவேன் பிச்சி’- ஜீவாவின் அல்வா

சொந்த அப்பாவுக்கே அல்வா கொடுப்பதில் கைதேர்ந்தவர் ஜீவா.அதிலும் ‘கோ’ ஹிட்டுக்கு அப்புறம், பந்தா பரமசிவமாகவே மாறிய ஜீவா, கவுதமுடன்,’நீ தானே என் பொன் வசந்தம்’மிஷ்கினுடன்’முகமூடி’ ஆகியவை கமிட் ஆன உடனே நாம் தான் டமில் இண்டஸ்ட்ரியின் வருங்கால சூப்பர் ஸ்டார் என்ற ஃபீலிங்குக்கு போய்விட்டார்.

’முகமூடி’‘நீ தானே என் பொன்வசந்தத்துக்கு முந்தியே பெருந்தொகையை ஜீவா அட்வான்ஸாகப்பெற்றுக்கொண்டு கமிட் ஆன படம்வாமனன் பட இயக்குநர் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கவிருந்த படம். ஆனால் ஹீரோயினை மாத்துவது ,கதையில் கரெக்‌ஷன் சொல்லுவது என்று அந்தப்படத்தின் காலத்தை கடத்தி வந்த ஜீவா,அஹமதுவுக்கும், அவரது தயாரிப்பாளருக்கும் எதற்கும் பிடிகொடுக்காதவராகவே இருந்துவந்தார்.

இப்படி மாதங்கள் பல கடந்த நிலையில்,இடையில் சற்றே மனமிரங்கி, அஹமதுவை தொடர்புகொண்ட ஜீவா,’’,நான் இப்போது கௌதம் மற்றும் மிஷ்கின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.அவை எப்போது முடியும் என்று அவர்கள் உட்பட யாருக்குமே தெரியாது.எனவே நீங்கள் கொஞ்சம் பொறுமை காத்துதான் ஆகவேண்டும்’’ என்று இழுக்கவே, அதை அப்படியே சூடான வார்த்தைகள் சேர்த்து தனது தயாரிப்பாளர் காதில் போட்டாராம் அஹமது.

இவ்வளவு நாட்கள் காத்திருந்ததுபோதாதென்று இனியும் காத்திருக்கவேண்டுமா என்று அஹமதுவும் அவரது தயாரிப்பாளரும் கொதித்த நிலையில்
, மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் அடுத்து ஒரு படத்தை இயக்கத் தயாராகிவிட்டார். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்போகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்படத்தில் ஜீவாதான் கதாநாயகன்.அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கினால் நம்நிலைஇன்னும் என்பதை உணர்ந்து இனி கவுன்சில் போவதுதான் ஒரேவழி என்று முடிவெடுக்க ஜீவா சற்று பதட்டமாகிவிட்டாராம்.

‘மவுனகுரு’ சாந்தகுமாரின் படத்தையும் இழந்துவிடாமல்,வாமண கோஷ்டிகள் கவுன்சிலுக்கும் போய்விடாமல், இருதரப்புக்கும் பிச்சிப்பிச்சி கால்ஷீட் பிச்சை போடமுடித்திருக்கிறாராம்.