’பட்ஜெட் கவலைய என்கிட்ட விடுங்க’ – அஜீத் படத்தில் அரவிந்தசாமி

’என்னது நானா மீண்டும் நடிக்கப்போகிறேனா, நான்சென்ஸ்’ என்று பேசிய சில தின்ங்களிலேயே மணிரத்தினத்தின் ‘கடலில்’ நடிக்க இறங்கிய அரவிந்தசாமி, அடுத்த படியாக, அஜீத் பட்த்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

முதலில் ஆர்யா,அடுத்து நயன் தாரா,தப்ஸி,பிருத்விராஜ் என்று நீண்டுகொண்டுபோன நட்சத்திரப்பட்டாளங்களுடன் இப்போது அரவிந்தசாமியும் சேர்ந்திருப்பது, அஜீத் ரசிகர்களை ஓவராகவே உற்சாகப்படுத்தியுள்ளது. அஜீத்தின் அண்ணனாக, அதாவது மூத்த தலயாக, ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம் அ.சாமி.

இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தின் படப்பிடிப்பை, ‘பில்லா2’ ரிலீஸாகவுள்ள ஜூன்15 அன்று மும்பையில் துவங்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ஸ்கிரிப்ட் வேலைகளை ஏறத்தாழ முடித்துவிட்டு, யுவன் ஷங்கர் ராஜாவுடன் கம்போசிங்கில் அமர்ந்திருக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தன்,’’ கதையை முடித்துவிட்டு, மேற்படி நட்சத்திரங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சற்று தயங்கியபடியே தான் தயாரிப்பாளரிடம் கேட்டேன். அவரோ சப்ஜெக்டை நீங்க பாத்துக்கங்க. பட்ஜெட் கவலையை என் கிட்ட விடுங்க என்று என்னைக்கூலாக்கி விட்டு, இவ்வளவு நட்சத்திரங்களையும் கமிட் பண்ணிக் கொடுத்துவிட்டார். நயன் தாரா, பிரித்விராஜ், அரவிந்தசாமி போன்றவர்களிடம் என்ன சம்பளம் பேசினார்கள் என்பது கூட எனக்குத்தெரியாது’’ என்கிறார்.

பெரும் கடனில் சிக்கித்தவித்து மீண்டு வந்த பிறகும், படத்தயாரிப்பு என்று இறங்கியபிறகு, இயக்குனர் கேட்டதெல்லாம் கொடுத்துவரும், ஏ.எம்.ரத்தினத்தின் அந்தப்பெருந்தன்மை மாறாமல் இருப்பது ஆச்சரியம்தான்.