’இருக்கு அதனால காட்டுறேன்’- குத்துப்பாடலுக்கு ‘இறங்கி’ வந்தார் பத்துமப்ரியா

‘’எனக்கு கிளாமராக நடிக்க ஆசையாக இருக்கிறது. என்னுடையது ’பொன்னான மேனி. அதைக் கொண்டாட வா நீ’ என்று எத்தனையோ டைரக்டர்களுக்கு சொல்லியும் என்னை சீரியஸான கேரக்டர்களில் மட்டுமே நடிக்கவைத்து என் கேரியரை பாழடித்துவிட்டார்கள்’’ என்று விரகதாபத்தோடு புலம்புபவர் வேறு யாருமல்ல நம்ம பத்மப்ரியாதான்.

சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக, மும்பைக்கும், பெங்களூருவுக்கும் பறந்துபறந்து போய், விதவிதமான போஸ்களில் எவ்வளவோ கிளாமரான ஸ்டில்களை வெளியிட்டபிறகும், பத்மப்ரியாவின் கிளாமர் பசியை யாரும் புரிந்துகொள்ளாது இருந்த நிலையில், மலையாள இயக்குனர் அமல் நீரத், தனது ‘பேச்சிலர்ஸ் பார்ட்டி’ என்ற படத்தில் பத்துவை முதல்முறையாக ஒரு குத்துப்பாடலுக்கு ஆடவைத்திருக்கிறார்.

‘என் படத்தில் பார் சீன் ஒன்றில் இடம்பெறும் குத்துப்பாடலில் ஆட சம்மதமா? என்று அமல் கேட்டவுடனே உற்சாகமாக சம்மதித்தேன். என்னைப்பொறுத்த வரையில் நடிப்பு என்று வந்துவிட்டால் எல்லா கேரக்டர்களையும் செய்யவேண்டும். எனது உடல்வாகு கிளாமருக்கு ஏற்றது. இந்த ஒரு பாடலுக்கு ஆடியதால் தொடர்ந்து குத்துப்பாடலுக்கு ஆடுவேன் என்று அர்த்தமில்லை. ஆனால் நல்ல கேரக்டராக அமையும் பட்சத்தில் எவ்வளவு செக்ஸியாக வேண்டுமானாலும் நான் நடிக்கத்தயார்’’

பத்துமா நீங்க விரும்புற மாதிரியெல்லாம் நடிக்கத்தயார். அதை நம்ம டைரக்டருங்க யாராவது படம் புடிக்கத்தயாரா?