’ஒரு மனுஷன் எப்பிடிங்க இவ்வளவையும் தடையறத்தாங்குவாரு?’

’வேதனை மேல் வேதனை போதுமடா மருமகனே’அருண் விஜய் நடிப்பில் , தயாரித்திருக்கும் ‘தடையறத்தாக்க’ படத்தை துவங்கிய சில நாட்களில் பாட ஆரம்பித்த பாட்டு, இன்னும் முடிக்க முடியாமல் தவிக்கிறார் அருணின் மாமனார்.

படத்தை இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டுவிடலாம் என்று தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இப்போது அதில் சிக்கல் எற்பட்டுள்ளதாம்.படத்தைத் தணிக்கைக்குழு பார்த்துவிட்டு, நாயகி மம்தா மோகன் தாஸ் மற்றும் குத்துப்பாடலில் கவர்ச்சி அளவுக்கதிகமாக இருக்கின்றன,எனவே இந்தப்படத்துக்கு ‘ ஏ ‘ சான்றிதழ்தான் என்று சொல்லி அப்படியே கொடுத்தும் விட்டதாம்.

படத்துக்கு இதுவரை ஏழு கோடிக்கு மேல் செலவாகி விட்டதாம். படத்தை வெளியிடும் நேரத்தில் ஏதாவது ஒரு தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உரிமை கொடுப்பதன் மூலம் கணிசமான தொகை கிடைக்கும்.அது படத்தை நன்கு விளம்பரம் செய்து வெளியிட உதவும்.ஆனால் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுவிட்டதால் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியாது. எனவே அதன் உரிமையை வாங்க யாரும் தயாராக இருக்கமாட்டார்கள்.

இப்படிப்பட்ட நேரங்களில் தொலைக்காட்சிக்காக என்றே இன்னொரு முறை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்குவது நடைமுறையாக இருந்து வந்ததாம்.இப்போது இருக்கும் அதிகாரி,ஒரு முறை தணிக்கை செய்தால் அவ்வளவுதான். இனிமேல் முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.’ ஏ ‘ சான்றிதழ் என்பதால் வரிவிலக்குக் கிடைக்காது என்பதே பெரிய அடி. அதுவுமில்லாமல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான தொகையும் கிடைக்காது என்பதால் நொந்துபோயிருக்கிறார் தயாரிப்பாளர் அருண்விஜயின் மாமா.

படம் எடுக்க வச்ச வகையில முதல்ல மருமகன்,அடுத்து பட்ஜெட்டை எகிற வச்ச வகையில டைரக்டரு,அதுக்கும் அடுத்து ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்த சென்சாரு… இப்பிடி வரிசையா ஒரு புரடியூசரை ’தடையறத்தாக்கு’னா அவரு எப்பிடிங்க தாங்குவாரு?