’அஜீத் என்னை விட்டு விலகவுமில்லை, அவர் என்னை கைவிடவுமில்லை’- சீறும் ‘சிறுத்தை’ சிவா

ajith-siva-1

‘பில்லா2’ படத்துக்கு அடுத்தபடியாக , விஷ்ணுவர்த்தனுக்கு முன்பே அஜீத் படத்தை இயக்கியிருக்க வேண்டியவர் , கார்த்தியை வைத்து ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா.

ஆனால் அதற்காக சில மாதங்கள் காத்திருக்கவேண்டி இருந்ததால்,

கேப்பில் ஒரு தெலுங்குப்படம் பண்ணிவிட்டு வருவோமே என்று ஆந்திராவுக்கு கிளம்பிப்போனார்.அப்படி அவர் இயக்கி கடந்த வாரம் வெளிவந்த படமே ‘தரவா’. ரவிதேஜா நம்ம ஆடுகளம் நாயகி தப்ஸியை பப்பரக்கா என்று தூக்கிப்பிடித்தபடி ஒரு போஸ்டர் பார்த்திருப்பீர்களே அதுதான் தருவா’.

படம் வந்த முதல் இரு தினங்கள் ஒரு ஹிட் படம் போல் காட்சியளித்தாலும் , திங்கள் முதல் படம் அக்கடா என்று படுத்துவிட்டது. இதை ஒட்டி சில பத்திரிகைகள் ‘தருவா தோல்வியானதால், அஜீத் இனியும் சிவாவுக்கு கால்ஷீட் தருவாருன்னா நினைக்கிறீங்க? என்று கேள்வியெழுப்ப, கொதித்து கொந்தளித்துவிட்டார் சிவா.

”அண்ணே கொதிக்கிறது கொந்தளிக்குறதெல்லாம் நம்ம உருவத்துக்கு செட் ஆகாது. கூலா இருங்க’’ என்று நண்பர்கள் சொன்னதை ஒட்டி அமைதியான சிவா,

‘’நான் தெலுங்குப்படம் இயக்கப்போனதே அஜீத்தின் சம்மதத்தோடுதான்.’தருவா’ தோல்விப்படமெல்லாம் கிடையாது. அஜீத் படத்திலிருந்து என்னை எப்படியாவது கழட்டிவிடவேண்டுமென்று நினைக்கிற சிலர் செய்யும் சதி அது.

இதுபோன்ற செய்திகளைப்பார்த்தெல்லாம் என்னை அஜீத் கைவிட்டுவிடமாட்டார்’’- சொன்னதையே திருமபத்திரும்ப,திரும்பத்திரும்ப சொல்கிறார் சிவா.

ajith-siva-2 ajith-siva-3 ajith-siva-4 ajith-siva-5