ஜான் ட்ரவோல்டாவின் மீது பாலியல் வழக்குகள்

john-travolta-film1

புரோக்கன் ஆரோ(Broken Arrow) புகழ் ஜான் ட்ரவோல்டாவின் மீது சொகுசுக் கப்பல் ஒன்றில் பணியாளராக வேலை செய்த வ்பேபியன் சான்சி என்பவர் பாலியல் குற்றம் சாட்டியுள்ளார்.

2009ல் தான் வேலை பார்த்த சொகுசுக் கப்பலில்

பயணம் செய்த போது ஜான் ட்ரவோல்டா தன்னுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட விரும்பியதாகவும், தனக்கு 12000 ஆயிரம் டாலர் தருவதாகப் பேசியதாகவும் குற்றம் சாட்டினார்.

இது பற்றி கப்பல் மேலதிகாரிகளிடம் தான் தெரிவித்த போது அவர்கள் தன்னை அறையில் அடைத்து வைத்ததாகவும் பின்னர் தன்னை வேலையை விட்டே நீக்கியதாகவும் தொலைக்காட்சி நேர்காணல் பேட்டியொன்றின் போது சான்சி கூறியிருக்கிறார்.

சமீபத்தில் தான் ட்ரவோல்டாவின் மீது இரு நபர்கள் தங்களை பொதுவில் அடையாளப் படுத்திக்கொள்ளாமல் பாலியல் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்குகள் இன்னும் நடந்துகொண்டுள்ளன.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் நடிகரின் புகழை வைத்து தானும் புகழ் பெறும் நோக்கில் செய்யப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளே என்று ட்ரவோல்டாவின் வக்கீல் பொரிகிறார்.

broken-arrow-john