‘கழுகு’ பட இயக்குனர் மீது பாய காத்திருக்கும் ‘வழக்கு எண்கள்

kalzuku-siva

இது என்னவிதமான உள்ளுணர்வு எழவோ தெரியவில்லை, ‘கழுகு’ படத்துக்கு விமர்சனம் எழுதும்போது ‘இந்த டைரக்டர்கிட்ட பாத்து பழகு’ என்று தலைப்பு வைத்திருந்தோம்.

இப்போது அந்தத்தலைப்பை பல ஆங்கிள்களில் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய வழக்கு, அவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு,

தயாரிப்பாளர் பட்டியல் சேகருடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை மீறியது போன்று ‘வழக்கு எண் 18/9’ ஐ விட,கணக்கு வழக்கற்று, பெரும் பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறார் இயக்குனர் சத்தியசிவா.

சிவரஞ்சனி. ‘கழுகு’ படத்தயாரிப்பு நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை செய்து வந்த இவரை,’நான் டைரக்டரானவுடனே உன்னைக்கல்யாணம் கட்டிக்கிறேன்’ என்ற ஆசைவார்த்தைகள் காட்டி ஏமாற்றிய சத்யசிவா படம் ரிலீஸாகி, ஓரளவு சுமாராகப்போனவுடன்,நமக்கு பெரிய இடத்தில் பெண் கிடைக்கும் என்று அவரைக் கழட்டிவிட முடிவுசெய்தார். இதனால் மனமுடைந்து விஷம் குடித்த சிவரஞ்சனிக்கு, எங்கே பிரச்சினை நம் தலையில் விழுந்து விடுமோ என்று பயந்து, மறுபடியும் அதே பொய்யான வாக்குறுதி வழங்கி, அவர் உயிர்தப்பும்வரை தினமும் ஆஸ்பத்திரியில் போய் சந்தித்திருக்கிறார்.

ஆனால் சிவரஞ்சனி உயிர்பிழைத்ததும், அப்பாடா ஆபத்து ஆளைவிட்டுச்சிடா’ என்றபடி,சத்தியசிவா மீண்டும் எஸ்கேப் ஆகிவிட, தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கெடுத்த வழக்கில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார் சிவரஞ்சனி.

எங்கே போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்களோ என்று பயந்து சத்தியசிவா தலைமறைவாகியுள்ள நிலையில்,அவருக்கு முதல்பட வாய்ப்பளித்த தயாரிப்பாளர் பட்டியல் சேகரும், தயாரிப்பாளர் சங்கத்துக்கு, நடிகர் சங்கத்துக்கு,மற்றும் இயக்குனர்கள் சங்கத்துக்கு ஒரு விநோதமான புகார் அனுப்பியுள்ளார்.அதில் தனக்கு தொடர்ந்து மூன்று படங்களை இயக்கித்தருவதாக இயக்குனர் சத்தியசிவா, ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருந்த்தாகவும்,அந்த ஒப்பந்தத்தை ஒரு டூப்ளிகேட் சாவி போட்டு தனது அலுவலகத்தை திறந்து திருடிச்சென்றுவிட்டதாகவும்’ தெரிவித்துள்ளார்.

விநியோகஸ்தர்களைப் பொறுத்தவரை ‘கழுகு’ முக்கிமுக்கி அசலை மட்டுமே வசூலித்த படம். அவரை வைத்து ஏன் பட்டியல் சேகர் தொடர்ந்து மூன்று படம் தயாரிக்க விரும்புகிறார்?. மருந்துகுடித்து உயிர்தப்பிய சிவரஞ்சனிக்கு வேறு ஏதாவது கதை இருக்கிறதா? என்பது போன்ற விசாரணைகளில் ஈடுபட்டு,’’வழக்கு எண் 19/8’மாதிரி இன்னொரு படம் பாலாஜி சக்திவேல் இயக்கினால் நன்றாக இருக்கும்.

kalzuku-case-2 kalzuku-case-3