ராஜா தயவில் கவுதம்மேனன் படத்தை கைப்பற்றிய கார்த்திக்

‘அரவான்’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த கார்த்திக் அப்படத்தின் படுதோல்வியால், ‘பாடுனதும் போச்சுடா நொள்ளக்கண்ணா’வாகி விட்டதாக சில துக்கடா செய்திகள் நடமாடுகின்றன.

;அரவான்’ இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு, தினமும் இரண்டிலிருந்து மூன்று பாடல்கள் பாடும் அளவுக்கு பிஸியாக இருந்த கார்த்திக், தான் மியூசிக் டைரக்டர் என்ற அடுத்த கட்டத்துக்கு தாவுவதை பெருமையாக நினைத்து,

ஆரம்பத்தில் அவராகவே பாடுவதைக் குறைத்துக்கொண்டார்.

‘அரவானின் பாடல்களும் பின்னணி இசையும் ஓரளவு பேசப்பட்டாலும் படத்தின் படுதோல்வியால், கார்த்திக்குக்கு அடுத்து இசையமைக்கும் வாய்ப்பு எதுவும் கிட்டவில்லை.’கிட்டாதாயின் சட்டென மற’ என்ற முடிவெடுத்து சரி இனி பாடப்போகலாம் என்று முடிவெடுத்தால் யாரும் பாட அழைக்கிற பாடாயில்லை.

இந்த சோகமயமான சூழலில், இசைஞானி இளையராஜாவின் தயவில் மீண்டுமொரு படத்துக்கு,அதுவும், இயக்குனர் கவுதம் மேனனின் சொந்தப்படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கார்த்திக்குக்கு கிடைத்திருக்கிறது.

இசைஞானியும், கவுதமும் கூட்டணி அமைத்திருக்கும்,’நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தில் இரண்டு பாடல் பாடும் வாய்ப்பை ராஜா கார்த்திக்கு தந்தார். இந்தப்பாடல்கள் ரெகார்டிங்கின்போது,கவுதமின் தயாரிப்பில், அவரது உதவியாளர் ப்ரேம் சாய் இயக்கும் பெயரிடப்படாத படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை, ’கார்த்திக்குக்கு தரவேண்டியதுதானே’ என்று ராஜா சிபாரிசு செய்ய, உடனே சந்தோஷமாக ஒப்புக்கொண்டாராம் கவுதம்.

தனது அடுத்த படவாய்ப்பு ராஜாவின் சிபாரிசில் வந்த பெருமையால்,’இனி ராஜவாழ்க்கை நாளை என் சொந்தம்’ என்று உற்சாகமாகப் பாடிக்கொண்டு, புதுப்பட கம்போஷிங்கில் இருக்கிறாராம் கார்த்திக்.

karthik