மணிரத்னம் போகும் பாதையில் ஷங்கரின் மனசு போகுதே மானே

kadal-samantha1

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு விக்ரம் [?] ஹீரோவாக நடிக்க, ஷங்கர் இயக்கும் படத்துக்கு கதையும் டைட்டிலும் கூட இன்னும் ரெடியாகாத நிலையில், தயாரிப்பாளரின் ஆர்வக்கோளாறுக்காக ஹீரோயினை உறுதி செய்யும் வேலையில் தீவிரமாக உள்ளார் ஷங்கர்.

அசினும் ஷங்கரும் ஃபேஸ்புக்கில் பேசிக்கொண்டார்கள், ட்விட்டரில் ட்விட்டிக்கொண்டார்கள் அதனால் அசின் தான் அடுத்த ஹீரோயின்

என்று அடிபட்ட செய்திகள், கொஞ்சம் ஓவராய் அடிபட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனநிலையில், தற்போது அந்த இடத்தில் சமந்தாவின் பெயர் தீவிர பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தீவிரத்துக்கு சொல்லப்படும் இன்னொரு முக்கிய காரணம் செண்டிமெண்ட். kadal-samantha1இதற்கு முன் மணி பயன்படுத்திய ஹீரோயின்களை, அடுத்ததாக உடனே ஷங்கர் பயன்படுத்திய அத்தனை படங்களும் செம ஹிட்டாம்.

ரோஜா’வில் மணிரத்னம் அறிமுகப்படுத்திய மதுபாலாவை ஜெண்டில்மேனில் ஷங்கர் போட்டார். இருவர்’ படத்தில் மணி பயன்படுத்திய ஐஸ்வர்யாவை ஷங்கர் அடுத்த்தாக ‘ஜீன்ஸ்’-ல் பயன்படுத்தினார். ‘பம்பாய்’ படத்தில் இருந்து அப்படியே மனீஷா கொய்ராலா ஷங்கரின் ‘இந்தியன்’க்கு தாவினார்.

kadal-samantha3அதே போக்கில்தான் இப்போது மணியுடன் ‘கடல்’ படத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் சமந்தா ஷங்கரின் அடுத்த பட ஹீரோயினாகப்போகிறார் என்கிறார்கள்.

மேற்படி தகவல் ஊர்ஜிதமாகும் பட்சத்தில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில், கவுண்டரிடம் செந்தில் அப்பாவியாய் கேட்ட ஒரு கேள்விதான் ஞாபகத்துக்கு வருகிறது.

kadal-samantha4