‘கார்த்தி’ருந்து காத்திருந்து கடுப்பாகிப்போன வெங்கட்பிரபு

venkat-prabhu-1

‘மங்காத்தா’ வெற்றிக்குப் பிறகு படுகெத்தாக திரிந்த வெங்கட் பிரபுவுக்கு, படம் ரிலீஸான நேரத்தில் ஏகப்பட்ட அழைப்புகள்.அப்போது அவர் விரும்பியிருந்தால் உடனே இன்னொரு அஜீத் படத்தையே கூட இயக்கியிருக்க

முடியும்.

என்னதான் பெரிய ஹிட் கொடுத்தாலும் வீட்டில் கொஞ்சகாலம் சும்மா உட்காரவேண்டும் என்ற விதி இருந்ததாலோ என்னவோ, அடுத்த படம் பண்ணுவதற்கு அவர் அட்வான்ஸ் வாங்கிய இடம் சூர்யா, கார்த்தியின் நிறுவனமான க்ரீன் ஸ்டுடியோஸ்.

சரி, ஒரே இடத்தில் ரெண்டு ஹீரோக்கள் இருக்கிறார்களே, கதை ரெடியானவுடன், அவர்களில் யாரையாவது ஒருவரை வைத்து ஷூட்டிங் ஆரம்பித்துவிடலாம் என்பது வெ. பிரபுவின் எண்ணம்.ஆனால் நினைத்தது ஒண்ணு நடந்தது ஒண்ணு. இப்போ அதனாலே முழிக்குது வெங்கட் கண்ணு.

காம்பினேஷனுக்கு பெரிய பிஸினஸ் இருக்கும் என்ற எண்ணத்தில் முதலில் பிரபு சூர்யாவுக்கு ஒன்றிரண்டு கதைகளைச்சொல்ல,’எல்லாமே வெறும் லைனாவே இருக்குது. எனக்கு டீடெய்லா கதை சொல்லுங்க’ என்று தட்டிக்கழித்துக்கொண்டே வந்திருக்கிறார் சூர்யா.வேற வழி இல்ல இப்போதைக்கு கார்த்தியை வச்சாவது படத்தை ஆரம்பிச்சிடலாம் என்று அவருக்கு கதை சொன்னபோது , ரெண்டு மூனு கதைகளைக் கேட்டு உதட்டைப் பிதுக்கிய கார்த்தியோ,’சென்னை-28, கோவா’ ல்லாம் எடுத்தது நீங்கதானா? என்பது போலவே பார்த்தாராம்.

இப்படி இரு சகோக்களின் அட்டகாசங்களால் மனம் வெறுத்துப்போன வெங்கட், தயாரிப்பாளர் ஞானவேலுக்கு போனைப்போட்டு,’ வீட்டுல வெட்டியா உக்காந்து உக்காந்து போரடிக்குது பாஸ். சீக்கிரம் ரெண்டு பேர்ல ஒருத்தர் கால்ஷீட் வாங்கிக்குடுங்க, இல்லைன்னா என்னை ஆளை விடுங்க. நான் வழக்கம் போல என்னோட மொக்கைப்பசங்கள வச்சி ‘கோவை28’ மதுரை38’ மாதிரி என்னத்தையாவது எடுத்துட்டுப்போறேன்’ என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறாராம்.
venkat-prabhu-2

venkat-prabhu-2