பாதி பகவானாக நின்ற அமீரின் ‘ஆதி பகவன்’

aadhi-bagawan-1

சில பல மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட அமீர்- ஜெயம் ரவி கூட்டணியின் ‘ஆதி பகவன்’ எப்பத்தான் முடிவுக்கு வரும் என்ற கேள்விக்குறி, இப்போது ஒரு புது பிரச்சினையால், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

முன்னூறு ரோல் முன்னூறு நாள் ஃபார்மேட்டில் படமெடுத்து

தமிழ்சினிமாவை குட்டிச்சுவராக்கி வரும் இயக்குனர்கள் பட்டியலில், முன்னணி வரிசையில் இருக்கும் அமீர், ஒரு வலுவான தயாரிப்பாளர் கிடைத்ததால், ‘ஆதி பகவானை’ வழக்கமான படங்களை விட அதிகமாக இழுத்தார்.

ஹீரோ ஜெயம் ரவி நம்ம படத்தை முடிக்காமல் வேறு படத்துக்கு போகமுடியாது. ஹீரோயின் நீது சந்திராவோ எப்போது கூப்பிட்டாலும் வருவதாக ப்ராமிஸ் பண்ணியிருக்கிறார். தயாரிப்பாளர் அன்பழகனோ எவ்வளவு பெரிய தொகை வேண்டுமானாலும் ‘குனிய’ தயாராக இருக்கிறார். அமீர் போன்ற பருத்த வீரனுக்கு வேறென்ன வேண்டும்? எனவே ஷூட்டிங்கை சவ்வாக இழுத்த அமீரை கடந்த வாரம் ஒரு ‘பேட் நியூஸ்’ தேடி வந்தது.

அதாவது, யார் என்ன பஞ்சாயத்து வைத்தாலும் பரவாயில்லை. அமீர் பட்த்தை கிடப்பில் போட்டுவிட்டு ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கல்யாண் இயக்கவுள்ள ‘பூலோகம்’ படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவது என்று ஜெயம் ரவியும் அவரது தந்தை எடிட்டர் மோகனும் முடிவெடுத்து கிளம்பிவிட்டனர்.

இன்னும் ஓரிரு தினங்களில், ‘பூலோகம்’ படப்பிடிப்பு துவங்க உள்ளநிலையில்,நகம் கடித்து துப்பி, தலையை சொறிந்து, தாடியை அரிந்தபடி செய்வதறியாது திகைத்து நிற்கிறாராம் அமீர்.

aadhi-bagawan-2 aadhi-bagawan-3