andrea-sing-1

யுவனின் இசையில் ‘பில்லா 2’ வில் ’மதுரைப்பொண்ணு’ பாடலில் கலக்கியுள்ள, பார்ட் டைம் பாடகி ஆண்ட்ரியாவுக்கு இசைஞானியின் இசையிலும் பாடிவிடவேண்டுமென்பது ஒரு தீராத ஆசையாம்.

’பில்லா 2’ பாடல் ரெகார்டிங்கின் போது, அந்த ஆசையை ஆண்ட்ரியா யுவனிடம் தெரிவிக்க, ‘இப்ப என்னையும் விட உன் ஃப்ரெண்டு கவுதம் மேனன் தான் அப்பா கிட்ட

ரொம்ப குளோசா இருக்கார். ரெண்டுபேரும், வாரத்துக்கு ஒரு தடவை லண்டனுக்கு போறாங்க, வர்றாங்க. நீ கவுதம் கிட்டயே பேசு’ என்று ஐடியா கொடுத்தாராம்.

ஆனால் கமலுடன் ‘விஸ்வரூபம்’ படத்தில் கைகோர்த்த நாளிலிருந்து கவுதமுக்கும், தனக்கும் பேச்சுவார்த்தைகூட இல்லை என்கிற தகவலை யுவனிடம் எப்படிச்சொல்வது என்று தவித்த ஆண்ட்ரியா, இப்போது இசைஞானியை சந்திக்க கமல் ரூட்டை கையிலெடுத்திருக்கிறாராம்.

’விஸ்வரூபம்’ பார்ட் 2’ விலும் தனக்கு மிக முக்கியமான கேரக்டர் இருப்பதால், கமலின் விருப்பப்படி, தன்னைத்தேடி வரும் புதிய புராஜக்டுகளை கதை கூட கேட்காமல் நிராகரிக்கிறாராம் ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா, அப்ப இப்போதைக்கு புதுப்படமே வேண்டாண்ட்ரியா ?.

andrea-sing-2 andrea-sing-3 andrea-sing-4 andrea-sing-5

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.