சூனியக்காரியாக நடிக்கிறார் ஏஞ்சலினா ஜோலி

ஏஞ்சலினா-சூனியக்காரி

ஸ்லீப்பிங் பியூட்டி(Sleeping Beauty) என்கிற தூங்கும் ராஜகுமாரியைப் பற்றிய தேவதைக் கதை சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சைச் சேர்ந்த சார்லஸ் பெர்ராட் என்பவரால் எழுதப்பட்ட கதை. இதை குழந்தைப் பருவத்தில் கடந்து வராத இங்க்லீஷ் மீடிய குழந்தைகளே இன்று கிடையாது.

வால்ட் டிஸ்னியின் தயாரிப்பில் முழுநீளப் படமாக (திரும்பவும்) எடுக்கப்படப் போகும் இப்படத்தில் ராஜகுமாரியை


100 வருடங்களுக்குத் தூங்கச் செய்யும் சூனியக்காரியாக நடிக்க இருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி.

அவருடைய உதடுகளும், கன்ன எலும்புகளும் அந்த வில்லி பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருத்தமாய் இருக்கின்றன.

இதைப் பற்றி ஏஞ்சலினா சொல்கையில், தன்னை விட தனது குழந்தைகள் தான் இப்படத்தில் நடிக்கப் போவதைப் பற்றி மிகுந்த ஆர்வமாய் இருப்பதாகவும், திரைக்கதையில் வில்லிக்கும் மனது இருப்பதாய் வித்தியாசமாய்க் கதை எழுதப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்;

மேல்பிசன்ட்டாக வரும் வில்லி சூனியக்காரியின் கேரக்டர் உண்மையில் நல்ல கேரக்டர் தான். ஒரு பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்பவளாகவும், ஆதிக்கம் செலுத்தும் தன்மையுள்ளவளாக இருந்தாலும் அவளிடமும் மென்மையான விஷயங்கள் உண்டு என்பதை வெளிப்படுத்தும் கேரக்டர்.

இந்த கேரக்டர் மூலம் டீன் ஏஜ் பெண்களுக்கு ஒரு நல்ல விஷயம் சொல்ல வருவது என்னவென்றால் ‘கிட்டத்தட்ட ஒரு வில்லியாக இருங்கள்’ என்று. அப்படி வித்தியாசமாக கேரக்டர் இருக்கிறது. அதனால் கொம்புகளை மாட்டிக் கொண்டு நடிக்க ரெடியாகிவிட்டேன் என்கிறார் இந்த ஆறு குழந்தைகளின் தாய். ஏஞ்சலினா-சூனியக்காரி2ஏஞ்சலினா-சூனியக்காரி3ஏஞ்சலினா-சூனியக்காரி4