’சட்டி சுட்டதடா, கைவிட்டதடா’- ட்ராப் ஆனது ஆர்யாவின் சொந்தப்படம் ‘படித்துறை’

image1

சுரேஷ் கண்ணன் என்கிற சுகா இயக்கிவந்த நடிகர் ஆர்யாவின் சொந்த்த்தயாரிப்பான’ படித்துறை’ என்ற படம் முற்றிலுமாக கைவிடப்பட்டது. இந்த தகவலை படத்தின் இயக்குனரே பகிரங்கமாக அறிவித்தார்.

பாலுமகேந்திரா, பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராகப்பணியாற்றி, ஆர்யாவின் தயவால் அவரது தம்பியை ஹீரோவாக்கி, ‘படித்துறை’ படத்தை இயக்கி வந்தார் சுரேஷ்கண்ணன். இளையராஜா இசையமைப்பில், ஏறத்தாழ

முடிவடையும் தறுவாய்க்கு வந்த இப்படத்தின், இறுதிக்கட்ட வேலைகளுக்கான எந்த வித முயற்சியிலும் தானும் ஈடுபடாமல், இயக்குனரையும் ஈடுபடவிடாமல் இழுத்தடித்து வந்தார் தயாரிப்பாளர் ஆர்யா.

எடுத்த வரை, படம் பார்த்த ஆர்யா, பயங்கர அப்செட் ஆனதாகவும், இனி படித்துறையை செப்பனிட பத்துப்பைசா செலவழிப்பதில்லை என்று முடிவெடுத்த்தாகவும் தகவல்கள் உலா வந்த நிலையில், படத்தின் இயக்குனர் சுகா நேற்று தனது ஃபேஸ்புக்கில், மிகுந்த வேதனையுடன், ‘நண்பர்களே தயவுசெய்து இனிமேல் எனது ‘படித்துறை’ படத்தைப்பற்றி விசாரித்து என்னை வேதனைப்படுத்தாதீர்கள். நான் அந்த படத்தை மறந்துவிட்டு அடுத்த பட்த்தை துவக்கப்போகிறேன். இது குறித்த தகவலை எனது படத்தின் மக்கள் தொடர்பாளர் திகில் முருகன் விரைவில் அறிவிப்பார். எனது புதிய படத்துக்கும் இசைஞானி இளையராஜாவே இசையமைக்கிறார் என்ற ஒரு தகவலை மட்டும் இப்போதைக்கு பகிர்ந்துகொள்கிறேன்’ என்று வேதனையுடன் செய்தி வெளியிட்டுள்ளார்.

சுகாவின் ஃபேஸ்புக்கில், மேற்படி தகவலைப்படித்த ஆர்யா மிகவும் மனமகிழ்ந்து, உடனே ‘லைக்’ போட்டதோடு நில்லாமல், தனது நண்பர்கள் நிறையபேருடன் தனது சொந்தப்படம் ட்ராப் ஆன செய்தியைப்பகிர்ந்து கொண்டாராம்.
aryamoviedroparyamovie