’’கஷ்ஷ்ட்டப்பட்டு சம்பாதிச்சேன், BMW கார் வாங்கியிருக்கேன்’’- ஹன்ஷிகா

hansika-bmw-1

சொந்தமா ஒரு பி.எம்.டபிள்யூ கார் வாங்குறதுங்கிறது சின்ன வயசுலருந்தே என்னோட கனவு. அது இப்பதான் நனவாகியிருக்கு’’ என்று சிலிர்த்துக்கொள்கிறார், போனவாரம் சின்ன வயசிலிருந்து,

இந்த வாரம் பெரிய வயசுக்கு வந்திருக்கும், ஓ.கே.ஓகே. கண்மணி ஹன்ஷிகா மோத்துவாணி.

தற்போது, சேட்டை மன்னன் சிம்புவுடன் ‘வேட்டை மன்னன், ’வேட்டை’ அண்ணன் ஆர்யாவுடன் ‘சேட்டை’ உட்பட ஒரே நேரத்தில் நான்கு படங்களில் கமிட் ஆகி அட்வான்ஸ்களை வாங்கிக்குவித்த கையோடு, தனது கார்கால ஆசையை தீர்த்துக்கொண்டிருக்கும் ஹன்ஷிகா, அதற்காக உழைத்த உழைப்பு கொஞ்சநஞ்சமல்ல’ என்கிறார்.

’’இந்த பி.எம்.டபிள்யூ. கார் வாங்கும் ஆசையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் ஓய்வே எடுக்காமல் வேலை செய்தேன். நாட்களை வீணடிக்காமல் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டேன். எனது ஆசைப்படி கூட்டு எண் 9 வரும்படியான காரே கிடைத்ததில் எனக்கு மெத்த மகிழ்ச்சி. கார் டெலிவரி எடுத்ததும், வண்டியை நானே ஓட்டிக்கொண்டு தனி ஆளாய் கோயிலுக்குப்போனேன். அடுத்த படியாக அம்மாவையும் என் தம்பி பிரஷாந்தையும் டின்னருக்கு அழைத்துச்சென்றேன் ‘’

என்று குதூகலிக்கும் ஹன்ஷிகா இனி படப்பிடிப்புகளுக்கு வரும்போது கூட டிரைவர் அமர்த்தாமல் தானே வண்டியை ஓட்டிவர ஆசைப்படுகிறாராம். ஆனால் ஃபெப்ஸி அதற்கு அனுமதிக்காது என்பது தெரியாதுபோலும்.

hansika-bmw-2 hansika-bmw-3 hansika-bmw-4