’’அமெரிக்க குளிர்காலத்தில் கமலும் நானும்’’- ஆண்ட்ரியா கதகதப்பு

kamal antriya

’பொண்ணுங்க வளர்ந்து, கிசுகிசுக்கள்ல, நம்மளை எல்லாம் தாண்டிப்போயிட்டிருக்கதால, இனிமே கிசுகிசுக்கள்ல அடிபடாம ஜாக்கிரதியா மீதிக்காலத்தை கழிச்சிடனும்’- கடந்த ரெண்டு மூனு வருடங்களாகவே கமல்ஹாசனின் மைண்ட் வாய்ஸ் இதுதான்.

அதன் படியே வாழ்க்கை புதிய பஞ்சாயத்துக்கள் எதுவும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த வேளையில், கமலை ‘விஸ்வரூப’ வம்பில் இழுத்துவிட்டுக்கொண்டிருக்கிறார் படத்தின் இன்னொரு நாயகியான

ஆண்ட்ரியா.

தனது நெருங்கிய வட்டாரங்களில் எல்லாம், ’’படத்துல கமலோட மனைவியா பூஜா குமார் நடிச்சாலும் கூட, கமல் சார் என்னோடதான் நெருங்கிப்பழகினார்’ என்று போகிறபோக்கில் கொளுத்திப்போட்டுக்கொண்டே போகிறாராம்.

அவ்வளவு ஏன், கமல் அருகில் நிற்கும்போதே, ‘விஸ்வரூபம்’ படத்தைப் பற்றிப்பேசவேண்டியவர், அதைத்தவிர மீதி என்னவெல்லாம் பேசுகிறார் என்று பாருங்கள்,

’’கமல் ஒரு லெஜண்ட். அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த போது உற்சாகத்தில் மிதந்தேன் அமெரிக்காவில் குளிர்காலத்தில் . அவருடன் வேலைப் பார்க்கும் சூழல் இனி கிடைக்காது. அங்கேயே கிறிஸ்துமஸ் தினத்தையும் அவருடன் கொண்டாடினேன். . கமல் சார் அருகில் இருக்க, இத்தனை இனிமைகளையும் அனுபவித்தது மறக்க முடியாத நாட்களாக அமைந்துவிட்டது. இந்தப் படத்தின் இந்தி வடிவத்துக்கும் என்னையே டப்பிங் குரல் கொடுக்கச் சொல்லிவிட்டார் கமல் சார் அது. என் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டியது மட்டுமல்ல, என் திறமை மீது எனக்கே புதிய நம்பிக்கையை வரவழைத்துள்ளது. இனி தொடர்ந்து கமல் சாருடன் பணியாற்றும் அளவுக்குஅவரை இம்ப்ரஸ் பண்ணியிருப்ப்தாவே நினைக்கிறேன்’’ என்று போகிறது ஆண்ட்ரியாவின் பேட்டி
.
கிசுகிசுக்கள் இல்லாத வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்துவிட்டதோ,அல்லது ‘விஸ்வரூபத்துக்கு அவ்வளவு பெரிய விளம்பரம் தேவைப்படுகிறதோ என்னவோ, கமல் ஆண்ட்ரியாவின் அமெரிக்க குளிர்காலப் பேச்சை ரசித்துக்கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்.

kamalantriiya