கிளியார் பதில்கள் – இலியானா டீச்சரின் பாடம்

கிளியார் பதில்கள் - இலியானா 1

கே: ‘சகுனி’ விளம்பரங்களில் ஆர்ப்பரிக்கிறார்களே, படம் உண்மையிலேயே அவ்வளவு பெரிய வெற்றிப்படமா? ஞானப்பிரகாசம்,சென்னிமலை.

கி: ‘கே’ பயலுக ஊருல ’கி’ பயலுக நாட்டாமை’ என்ற பிரசித்தி பெற்ற பழமொழி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் பல சமயங்களில் நடப்பது அதுதான்.
நேற்று ‘சகுனியாளர்கள், அவர்களே வெளியிட்டிருக்கும் ஒரு பத்திரிகைக்

குறிப்பில், பட விளம்பரச் செலவுக்கு மட்டுமே ரூ. ஐந்துகோடி பட்ஜெட் ஒதுக்கியிருக்கிறோம் என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூக்குரலிடுகிறார்கள். நல்லா ஓடுற படத்துக்கு, நயா பைசாவுக்கு கூட விளம்பரம் செய்யத்தேவை இல்லை எனும்போது, இந்த ஐந்துகோடி என்னத்துக்காம்?

கே: உன் நொள்ளைக்கண்ணுக்கு நல்ல விசயங்களே தட்டுப்படாதா கிளிப்பயபுள்ள?’ தனசேகரன்,திருநெல்வேலி.

கடந்த வாரம். பிரசாத் லேப்பில் நடந்த ‘சுழல்’என்ற படத்தின் ஆடியோ,ட்ரெயிலர் வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். ஒரு பிரபல நடிகர் தவிர படத்தில் கிளியார் பதில்கள் - அதுல் குல்கர்னி 1நடித்திருக்கும் ஏனையோர் அனைவரும் புதுமுகங்கள்.
அந்த பிரபல நடிகரையும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த மற்ற வி.ஐ.பி.களையும் மேடைக்கு அழைத்து அமரவைத்த பிறகு, இறுதியாக, படத்தில் நடித்த புதுமுகங்களை மேடைக்கு வரும்படி, நிகழ்ச்சித் தொகுப்பாளினி அழைத்தபோது, அவர்களுக்கு மேடையில் அமர இடம் இல்லை என்பதை அவர் கவனிக்கத்தவறிவிட்டார்.

அந்த புதுமுகங்கள் மொத்தமாக, மேடை அருகே வந்து என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கி நின்றபோது,சேரில் அமர்ந்திருந்த பிரபல நடிகர் சட்டென எழுந்தார். மேடைக்கு கீழே நின்றுகொண்டிருந்த சக நடிகர்களை உற்சாகமாக மேடையேறச்சொல்லி,அனைவரையும் வரிசையாக வி.ஐ.பி. சேர்களுக்குப்பின்னால் நிற்கச்செய்துவிட்டு,’ யார் சொன்னதையும் கேளாமல், அவர்களில் ஒருவராக அவரும் நிகழ்ச்சி முடியும் வரை நின்றுகொண்டே இருந்தார்.

அப்படி அவர் நின்றுகொண்டிருந்தபோதும், மொத்த நிகழ்வுகளையும் தனது புன்னகையோடே ரசித்துக்கொண்டிருந்தார். அந்த அற்புத மனிதர்,’ஹே ராம்’ மற்றும்,’சாந்தினி பார்’ படங்களுக்காக, இருமுறை சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற அதுல் குல்கர்னி.

கே: நடிகர் ஷாம் எங்கே ஆள் அட்ரசையே காணோமே?’ கே.எஸ்.மணி, ராமநாதபுரம்.

கி: சற்றுமுன்னர்தான், ஷாம் கடும் சிரத்தையுடன் பணியாற்றிவரும்,’6’ படத்தின் மக்கள் தொடர்பாளர் ஜான் ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அதை அப்படியே உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத ஒரு காரியத்தை செய்திருக்கிறார் நடிகர் ஷாம்
படத்தின் கேரக்டருக்காக சில ஹீரோக்கள் தாடியும் நீண்ட தலை முடியும் கிளியார் பதில்கள் - ஷாம் ன் 6வளர்த்து வித்தியாசம் காட்டுவார்கள். அல்லது, மொட்டை அடிப்பார்கள். உடம்பை ஏத்துவதும் இறக்குவதும் தவிர, சில சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் கூட எடுப்பார்கள்.

ஆனால் இதிலிருந்து வித்தியாசப்பட்டு நடிகர் ஷாம் , கட்டையால் கண்ணுக்கு கீழே ஓங்கி அடித்தால் கண்கள் எப்படி வீங்குமோ அவ்வளவு பெரிதாக வீங்க வைத்து நடித்திருக்கிறார். ‘6’ என்ற படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக தமிழ் சினிமாவில் யாரு எடுத்திராத ரிஸ்கை எடுத்திருக்கிறார் ஷாம்.
‘கிட்டத்தட்ட பத்து நாட்கள் தூங்காமல் இருந்து அந்த தோற்றத்தை கொண்டு வந்தேன்.. வி இசட். துரை இயக்கத்தில் இப்போது ”6 ” என்ற படத்தில் நடித்து வருகிறேன். ஆறு கெட் அப், ஆறு மாநிலங்கள், ஆறு மெழுகுவர்த்திகள் என்று ஆறு அர்த்தம் கொண்ட சம்பவங்கள் இடம்பெறும்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக 89 கிலோ எடையிலிருந்து 72கிலோவாக எடையைக் குறைத்தேன். கிட்டத்தட்ட ஒருவருடம் தாடியும் நீண்ட முடியுமாக ஆறு மாநிலங்களில் சுற்றித்திரிந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இதையும் தாண்டி படத்திற்கு இன்னும் எபெக்ட் தேவை என டைரக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்போதுதான் இயக்குனர் துரையிடம், நான் கண்களை இப்படி வீங்க வைத்து வருகிறேன். அதற்கு ஒரு பத்து நாள் தூங்காமல் இருக்கவேண்டும் என்றேன். அவர், அது முடியுமா? ஆபத்தாச்சே? மற்ற இடமென்றால் பரவாயில்லை.. கண்ணில் போய் ரிஸ்க் எடுக்க வேண்டுமா? வீக்கம் குறையாவிட்டால் வாழ்க்கை பூரா கண்தெரியாமல் போக நேரிடும். தவிர நீ ஒரு நடிகன். நடிகனுக்கு முகம் தான் முக்கியம் . அந்த அழகு இந்த படத்துக்கு பிறகும் வேண்டும். வேண்டாம் ஷாம் ரிஸ்க் என்றார்.

இருந்தாலும் இந்த படத்தில் என் முழு அர்ப்பணிப்பையும் காட்டி இருக்கேன். இந்த படம் எனக்கு ரொம்ப முக்கியம். அதனால் செய்தே தீருவேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டேன். இடையில் ஒருநாள் இயக்குனருக்கு போன் செய்து இன்னும் நான்கு நாட்கள் கழித்து ஷூட்டிங் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வைத்துவிட்டேன்..

எல்லோரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாராக காத்திருக்க நான் போய் இறங்கினேன். என் கண்ணைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி. சில மணி நேரத்துக்கு என் கண்களைப் பார்க்கவே பயந்தார்கள்.

கடவுள் புண்ணியம் மீண்டும் என் கண்கள் பழைய நிலைக்கு ஒரு வாரம் கழித்து திரும்பியது. இல்லையென்றால் நினைத்துப்பார்க்கவே விபரீதமாக இருக்கிறது. இதில் ஒரு துளி மேக் அப் கூட நாங்கள் பயன்படுத்தவில்லை. சினிமாதான் எனக்கு எல்லாம். அதற்காக ஷாம் எதையும் செய்வான் என்பதை இந்த 6 படம் உலகிற்கு சொல்லும் . கேரக்டருக்காக மெனக்கெடும் விஷயத்தில் ரஜினி சார், கமல் சார் இருவருமே என் வழிகாட்டிகள். எந்திரனில் ரஜினி சார் பட்ட கஷ்டங்களைப் பார்த்து பிரமித்தேன். அதே போல, கமல் சார் ஒவ்வொரு படத்திலும் கேரக்டருக்காக எத்தனையோ ரிஸ்குகளை எடுத்தவர். அவர்கள் வழியில் பயணிக்க முயற்சிக்கிறேன் என்றார் நம்பிக்கையாக,” .மேலும் படத்திற்காக தாடியும் மீசையுமாக உடல் மெலிந்து காணப்பட்ட அவரை காண அவர்கள் அம்மாவுக்கும் மனைவிக்கும் தாங்க முடியவில்லை. அம்மா பல நேரம் அழுதே விட்டார்கள் என்பதால் ஆறு மாதம் யாரையும் பார்க்காமல் இருந்துள்ளார். மனைவியும் அம்மாவையும் பெங்களூருக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் சென்னைக்கும் ஷூட்டிங்குக்கும் நடுவே மாதங்களை ஓட்டியுள்ளார்.

கே: உண்மையை மறைக்காமல் சொல்லவேண்டும் கிளியாரே, நடிகைகள் யாரையாவது காதலித்த அனுபவம் உண்டா?’ முகிலன், திருமங்கலம்.

கி; கேள்வியில் ஒரு சிறு திருத்தம். நடிகைகளில் யாரையாவது காதலிக்காமல் இருந்த்துண்டா என்றுதான் நீங்கள் கேட்டிருக்கவேண்டும். கடைசியாக பெயர்ப்பொருத்தம் கிளியண்ணாவுக்கு நன்றாக இருக்கிறதே என்று இலியாணா வரைக்கும் லவ் பண்ணிப்பார்த்தேன். பட் நோ ரெஸ்பான்ஸ். இப்ப ஆந்திராவுல விஜயவாடா பக்கத்துல வாரத்துக்கு ஒரு நாள் தெலுங்கு டியூசன் எடுக்குறாங்களாம் இலியாணா.
போய் கத்துக்கலாமான்னு சபலமா இருக்கு.

கிளியார் பதில்கள் - இலியானா 2கிளியார் பதில்கள் - இலியானா 3