மேத்யூ மெக்கார்னகே கேமிலா ஆல்வ்ஸை திருமணம் செய்தார்

mathew-camila-1

இதில் என்ன விசேஷம் ? விசேஷம் ஒன்றுமில்லை. கடந்த ஆறு வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு லெவி, திவா என்று இரு குழந்தைகள் பிறந்து

பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டன. இப்போது தான் மெக்கார்னகே காதல் காலம் முடிந்து கல்யாணத்தில் வந்து நின்றிருக்கிறார்.

போன மாதம் ஒரு நாள் காலை மேத்யூ தன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தி வந்து கதவைத் திறந்த கேமிலாவிடம் வாசலில் முழந்தாளிட்டு மேல் நாட்டுப் பாணியில் மோதிரத்தை நீட்டியபடி ‘என்னைக் கல்யாணம் செய்து கொள்வாயா?’ என்று கேட்டிருக்கிறார் இந்த ‘வெட்டிங் ப்ளானர்’காரர்.

ஒரு கணம் யோசித்த (இரண்டு பிள்ளைங்க பெத்த பின்னாடியும் என்ன யோசனை?) கேமிலா பின்பு மெக்கார்னகேவுக்கு ஓ.கே. சொல்ல கடந்த ஜூன் 9ஆம் தேதி தங்களது குழந்தைகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வாழ்த்த எளிமையாக திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு குடும்ப சகிதம் வந்திருந்த நண்பர்கள் இவர்களது பெரிய வீட்டின் பின்புறமிருந்த திறந்த வெளியில் ஒரு மூன்று நாட்கள் கூடாரமடித்துத் தங்கி விருந்துகள் சமைத்து சாப்பிட்டு தங்கிச் சென்றார்களாம்.

கேமிலா ஆல்வ்ஸ் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற மாடல் ஆவார். பிராஞ்சலினா ஜோடி பல குழந்தைகள் பெற்ற பின் திருமணம் செய்ய முடிவெடுத்தது போல இவர்களும் முடிவெடுத்து திருமணம் செய்துள்ளனர்.

கல்யாணமெல்லாம் அந்தக் காலத்துப் பேச்சு, ‘பிடிச்சா சேர்ந்து என்ஜாய் பண்ணு.. பிடிக்காமப் போக ஆரம்பிச்சவுடன் கட் பண்ணிட்டு போய்ட்டே இரு’ என்று நம் மறத்தமிழ் பாய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் மாடர்னா பேசிக்கிட்டிருக்கிறப்போ இவுங்க ஏன்யா இப்படி கல்யாணம் கில்யாணம்னு பண்ணிக் கொழப்புறாங்க? பாக்கலாம்..

mathew-camila-2 mathew-camila-3