’ மிர்ச்சி சிவா மாதிரி மொக்கை பையனுக்கு ‘பில்லா2’ மாதிரியாங்க கதை சொல்ல முடியும்?

mirchi-siva-billa1

ஒரு படம் ஓடிவிட்டால் போதும், நம் தமிழ்சினிமா ஹீரோக்கள் தைய்யா தக்கா’ என்று பரத நாட்டியம் ஆட ஆரம்பித்துவிடுவார்கள்.

‘களவாணி’ மைனா’ ஹிட்டுகளுக்கு அப்புறம், புதிய ஹீரோக்களான விமலும், விதார்த்தும் ஆடி ஓய்ந்துள்ள நிலையில், இப்போது புதுசாக கெட்ட ஆட்டம்

போட்டுக்கொண்டிருப்பவர் ‘மிர்ச்சி’ சிவா.

இவர் நடித்த ‘தமிழ்ப்படத்தை தொடர்ந்து, கலகலப்பு @ மசாலா கஃபே’ என்ற ஹாலிவுட் படமும் வசூல் ரீதியாக சுமாராகப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த படம் குறித்து பேச வருகிறவர்களிடம் சம்பளமாக எண்பது லட்சம் கேட்கிறாராம்.

மேற்படி தொகையைக்கேட்டு, லேசாக நெஞ்சைப்பிடித்தபடி, தயாரிப்பாளர்கள் ஒதுங்கிக்கொள்ள, கதை சொல்ல முயற்சிக்கும் இயக்குனர்களுக்கு, வேறுவிதமான டார்ச்சர்களை கொடுக்கிறாராம் சிவா.

‘’சமீபத்துல நிறைய மொக்கை கதைகளா கேட்டு ஓவரா டயர்டாயிட்டேங்க. அதனால எனக்கு உடனடி தேவை ரெஸ்ட். அதுவும் போக இந்த வருஷம் என்னோட கதை,வசனம், டைரக்ஷன்ல நானே நடிக்கப்போறதால, இப்போதைக்கு வெளிய கதை கேக்குற ஐடியா எனக்கு சுத்தமா இல்லை. ஸோ பை பை’’ என்றபடி போனை கட் பண்ணி விடுகிறாராம்.

’சிவா மாதிரி மொக்கை பையனுக்கு ‘பில்லா2’ மாதிரியாங்க கதை சொல்ல முடியும். இருந்தாலும் இவரு அலும்பு கொஞ்சம் ஓவராத்தாங்க இருக்கு’ என்று புலம்புகிறார்கள் சிவாவிடம் கதை சொல்ல முயற்சித்து முடியாமல் போன சில உதவி இயக்குனர்கள்.
mirchi-siva-billa2

mirchi-siva-billa3