’’அடுத்த படமா ஆள வுடுங்க சாமி’’ – தெறித்து ஓடும் தடையற டைரக்டர்

கடந்த வாரம் ரிலீஸாகி, விமர்சகர்கள் மத்தியில் ஏகோபித்த பாராட்டுக்களையும், தியேட்டர்களில் சுமாரான வசூலையும் பார்த்த படம் ‘தடையறத்தாக்க’. அருண் விஜய்க்கு முதல்முறையாக, ஒரு நடிகராக மரியாதை சேர்த்த இந்தப்படத்தை அவரது சொந்த மாமனாரே தயாரிக்க, கவுதமின் உதவியாளர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார்.

சுமார் மூன்று முதல் நான்கு கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டு துவங்கப்பட்ட படத்தின் பட்ஜெட் இறுதியில் ஆறு கோடிக்கும் மேல் ஆனநிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையில் பலத்த கருத்து வேறுபாடு

ஏற்பட்டது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் கூட இருவரும் பகிரங்கமாகவே மோதிக்கொண்டார்கள்.

தற்போது படத்துக்கும் ,இயக்குனருக்கும் நல்ல பெயர் கிடைத்திருப்பதால், ‘தடையறத்தாக்க’ காம்பினேஷனை அப்படியே ரிபீட் செய்தால் அருண் விஜயின் கேரியருக்கு உபயோகமாக இருக்கும் என்று அவரது நலம் விரும்பிகள் சொல்ல, அருண், இயக்குனர் மகிழ் திருமேனியை தொடர்பு கொண்டு, தன்னை வைத்து இன்னொரு படம் இயக்கித்தரும்படி கேட்டுக்கொண்டாராம்
.
’இதற்காகத்தானே காத்திருந்தேன் அருண்குமாரா’ என்று நினைத்துக்கொண்ட மகிழ்திருமேனி,’’ அருண் உங்களைப் பத்தி எனக்கு எந்த கம்ப்ளைண்டும் இல்ல. ஆனா உங்க மாமனார் [தயாரிப்பாளர்], ஒரு குறிப்பிட்ட சமயத்துக்கு அப்புறம் என்னை பாடாப்படுத்த ஆரம்பிச்சிட்டார். படத்துக்கு எனக்கு பேசின சம்பளத்துல கால்வாசி கூட தரலை.
இன்னும் ஒரு பத்து நாள் ஷூட் பண்ணுனா நல்லாருக்கும்னு சொன்னப்ப, ‘பேசாம எடுத்தவரைக்கும் எடிட் பண்ணிக்குடுன்னார். அதனால தயவு செஞ்சி என்ன ஆள வுடுங்க. நான் ஒரு பெரிய ஹீரோ கூட ஒரு பெரிய பட்ஜெட் படம் பண்ணி முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் நாம சேர்ந்து இன்னோரு படம் பண்றதைப் பத்தி யோசிக்கலாம்’’ என்றாராம்.

’படம் நல்லா வரணுமேங்குறதுக்காக அவர் கேட்ட வசதியெல்லாம் செஞ்சி குடுத்தோம். இப்ப றெக்கை முளைச்சி வேற ஹீரோ கிட்ட பறந்து போயிட்டாரே’- என்று புலம்புகிறது அருண் விஜயின் மாமனார் வட்டாரம்.