’மோகன்லாலுக்கு ஜோடியா ? ஓ..நோ.. அவர் எனக்கு டாடி மாதிரி’ –ட்ரிக்‌ஷா மறுப்பு

mohnalal-trisha-1

ஒரே படத்தை இரண்டு மூன்று இயக்குனர்கள் இயக்குவது மலையாளத்தில் சகஜமான ஒன்று. இப்போது லேட்டஸ்டாக ஐந்து இயக்குனர்கள், படத்தின் ஐந்து பகுதிகளை இயக்கப்போகும் படம் ஒன்று தயாராகி வருகிறது. ‘டி கம்பெனி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மெகா பட்ஜெட் ஆக்‌ஷன்

படத்தின் முதல் போர்சனை மோகன்லால் ஹீரோவாக நடிக்க, பிரபல டைரக்டர் ஜோஷி இயக்குகிறார்.

மற்றும் ஷாஜிகைலாஸ்,தீபன், பத்மக்குமார், விநோத் விஜயன் ஆகியோர் இயக்க, பிரித்விராஜ்,திலீப், ஃபகத் ஃபாசில், அனூப் மேனன், சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவை அணுகியிருக்கிறார்கள். தமிழிலும் தனது இன்னிங்ஸ் ஏறத்தாழ முடிவுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், மலையாளத்தில் ஒரு பெரிய படம் ,அதுவும் மோகன்லாலுக்கு ஜோடியாக என்றவுடன், த்ரிஷாவும், அவரது ம்ம்மியும், நாக்கில் எச்சில் சுரக்க சம்பளம் பேச ஆரம்பித்தனர்.

‘’தெலுங்குல ஒரு கோடி வாங்கிட்டிருக்கோம். தமிழ்ல 90 லட்சம். மலையாளம் சின்ன ஏரியாங்கிறதால 75 லட்சம்னா நடிக்கலாம்’’ என்று சொன்னவுடன் எதிர்முனையில் தயாரிப்பளரும், இயக்குனருமான விநோத் விஜயன், சில சிக்கலான வார்த்தைகளால் திட்டிவிட்டு, ‘’த்ரிஷாக்குட்டிக்கு நாங்கள் சம்பளம் 6 லட்ச ரூபாய்ன்னு போட்டு வச்சிருக்கு. இண்ட்ரஸ்ட் இருந்தா கால் மி’ என்று போனைத் துண்டித்துவிட்டாராம்.

ஆரமபத்தில் தனது முதல் மலையாளப்படமே மோகன்லாலுடன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த த்ரிஷா, தனக்கு மிக மட்டமான சம்பளம் பேசியதால் படத்தை விட்டு வெளியேறியது தெரிந்தால், கவுரவக்குறைச்சல் என்று கருதி, ‘’எனக்கு முதல்ல பட்த்துல மோகன்லாலுக்கு ஜோடிங்குறது தெரியாது. அய்யோடா மோகன்லால் என்னோட டாடி ஏஜ்காரர் . அவரோட எப்பிடி ஜோடி போட முடியும்? என்கிறாராம்.

அப்ப ‘மன்மதன் அம்பு’ல கமலுக்கு ஜோடியா நடிச்சீங்களே, அவருக்கு உங்க வயசா மேடம்?

mohnalal-trisha-2 mohnalal-trisha-3 mohnalal-trisha-4