ஆண்ட்ரியாவும் நீங்களும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி கட்டி உருளுவீர்களாமே ?- ‘விஸ்வரூப பூஜா குமார்

pooja

பூஜா குமார். ‘கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தின் இரு நாயகிகளுல் ஒருவர். படத்தை பார்த்தவுடன் இவரை எங்கோ பார்த்த மாதிரி ஞாபகம் மட்டும் வந்தால், நீங்கள் சாதாரண தமிழ்சினிமா ரசிகர். சட்டென உடனே கண்டிபிடித்துவிட்டீர்களானால் உங்கள் சட்டைக்காலரை தூக்கிவிட்டுக்கொள்ளவேண்டியதுதான்.

யெஸ். கடந்த கடந்த 2000-ம் ஆவது ஆண்டில் வெளிவந்த கே.ஆரின், ‘காதல் ரோஜாவே’ படத்தின் நாயகிதான் இந்த பூஜா. அப்படத்தின் தோல்விக்குப்பிறகு ஒரேயடியாக அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட பூஜா, அவ்வப்போது

ஒன்றிரண்டு பரீட்சார்த்த முயற்சி வகையிலான இந்தி மற்றும் ஆங்கிலப்படங்களில் நடித்துவிட்டு, மாடலிங் ,டி.வி, ஷோக்கள், ஃபேஷன் ஷோக்கள் என்று ஷோக்காக செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்ததை ஒட்டி, சுமார் 12 வருட இடைவெளிக்குப்பிறகு தமிழ் சினிமா பத்திரிகையாளர்களை கமலின் எல்டாம்ஸ் ரோடு அலுவலகத்தில் வைத்து சந்தித்தார் பூஜா குமார்.

பூஜாவுடன் ஒரு நேர்காணல்:

கே: விஸ்வரூபம்’ படத்தில் என்ன வேடத்தில் நடிக்கிறீர்கள் ?

படத்தில் என் கேரக்டரின் பெயர் நிருபமா. கமல் சாரின் மனைவி. கதக் நடனப்பள்ளி நட்த்தும் கமல் மீது ஒரு கட்டத்தில் சந்தேகம் வந்து, ஒரு ஏஜென்ஸியின் உதவியுடன் அவரை வேவு பார்க்க ஆரம்பித்து, கண்டுபிடிக்கக்கூடாத ஒன்றை கண்டுபிடிக்கிறேன். மீதி வெள்ளித்திரையில்…

கே அப்படி என்ன கண்டுபிடித்தீர்கள் ?

அதைச்சொன்னால் கதை முற்றிலும் வெளியே தெரிந்துவிடும். நான் கமல் சார் அலுவலகத்தை விட்டு வெளியேறி அமெரிக்கா போகவேண்டும்.

கே: படத்தில் கமலுடன் எத்தனை முத்தக்காட்சிகளில் நடித்திருக்கிறீர்கள் ?

வெரி ஸாரி. ஒரு முத்தக்காட்சி கூட கிடையாது. இன்னும் சொல்லப்போனால், கமல் சாருடன் எனக்கு டூயட் கூட கிடையாது. இதைப்பற்றியெல்லாம் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. அவரோடு சேர்ந்து ஒரு படத்தில் நடித்தோமே என்ற அந்த ஒரு பெருமை போதும் எனக்கு.

கே: படத்தின் இன்னொரு ஹீரோயின் ஆண்ட்ரியாவும் நீங்களும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி கட்டி உருளுவீர்களாமே ?

நல்ல கற்பனைவளம் கொண்ட கேள்வி. ஆண்ட்ரியா, முதல் ஒருசில சந்திப்புகளிலேயே எனக்கு நல்ல தோழியாகிவிட்டார். படத்தில் அவருடைய கேரக்டரும் பிரமாதமானது. விஸ்வரூபம்’ இதுவரை அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படம்.

கே: படத்துக்கு நீங்கள் தான் டப்பிங் பேசப்போகிறீர்களா?

இந்திப்பதிப்பிற்கு மட்டுமே நான் டப்பிங் கொடுக்கிறேன். தமிழ் இன்னும் சரியாக கற்றுக்கொண்ட பிறகே டப்பிங் பேச ஆசை.

கே: தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடிக்கும் எண்ணம் உண்டா ?

வாய்ப்புக்கள் வந்தால் தொடர்ந்து நடிக்கவே ஆசை.

கே: உங்களுக்கு பாய் ஃபிரண்ட் யாராவது இருக்கிறார்களா?

ஏன் நீங்க ஃப்ரியா இருக்கீங்களா?

[ ஃப்ரீதான் ஆனா அமெரிக்காவுக்கு ஃப்ளைட் டிக்கட் எடுக்குற அளவுக்கு கையில சில்லறை இல்ல மேடம் ]

poojakumar stillspooja