தீபாவளிக்கு வருவதே சந்தேகம்தான் கவுதமின் ‘நீ தானே என் பொன்வசந்தம்’?

நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமான செய்திதான் .ஆனால் வேறு வழி?

செய்வதறியாது திகைத்து, நிற்பதுவே நடப்பதுவே தவிப்பதுவே ஆகிய மூன்றுமாக ஆகியிருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன்.

ஜூலை 1-ம் தேதி பரபரப்பான ஒரு ஆடியோ வெளியீட்டுவிழா நடத்தி, மூன்றாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் பண்ணிவிடலாம் என்று கவுதம் தீட்டியிருந்த திட்டத்தில்தான் சமந்தா ரூபத்தில் பெரும் இடி விழுந்திருக்கிறது.

‘நான் ஈ’ தாறுமாறாக ஓட ஆரம்பித்தவுடன், தனக்கு மறுவாழ்வு கொடுத்த கவுதமுக்கே தண்ணி காட்டுகிறாரா சமந்தா என்று யாரும் கடுப்பாக வேண்டியதில்லை. கவுதம் மீதான மரியாதையும், நன்றியும் சமந்தாவிடம் அப்படியேதான் இருக்கிறது. அவருடைய மனசு கவுதமுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறதே ஒழிய, அவருடைய உடல்நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

அப்படி என்னதாங்க பிரச்சினை, ஏன் இவ்வளவு ஓவரா பில்ட்-அப் பண்றீங்க?

அரசல் புரசலாக நடமாடிய சமந்தாவின் சரும வியாதி, கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அளவுக்கு உண்மைதான். ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் விழும் ஒளியை தாங்கும் சக்தியை சமந்தாவின் சருமம் இழந்துவிட்டது.

கடைசியாக சமந்தாவை பரிசோதித்த அமெரிக்க டாக்டர் ஒருவர்,’’ இன்னும் குறைந்தது மூன்று மாதங்களுக்காவது கேமரா,ஃப்ளாஷ் வெளிச்சங்களுக்கு முன்னால் நீ நிற்கக்கூடாது’’ என்று கடுமையாக எச்சரித்திருக்கிறாராம்.

இதைத்தெரிந்துகொண்டபிறகு, கடைசி ஷெட்யூலை சுமார் 30 நாட்கள் வரை ஷூட் பண்ண நினைத்திருந்த கவுதம் ,’’அட்லீஸ்ட் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டுமாவது கால்ஷீட் கொடு .நான் படத்தை முடித்துவிடுகிறேன் ‘’என்று எவ்வளவோ கெஞ்சிப்ப்பார்த்தும் சமந்தா மசியவில்லையாம்.

இப்போது ‘நான் ஈ’யும் பெரிய ஹிட்டாகியுள்ள நிலையில், இனியும் தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால் தனது செல்போனை, ‘ஸாரி இனி இவர் விரும்பும் வரை இவரை தொடர்புகொள்ள முடியாது’ என்று சொல்லவைத்துவிட்டு,ரகஸியமாக சிகிச்சை மேற்கொள்ள கிளம்பிவிட்டாராம் ‘ஈ’யின் காதலி.

சரி நடுவுல சும்மா இருப்பானேன் என்று ‘யோஹன். அத்தியாயம் ஒன்று’ ஸ்கிரிப்ட் வேலைகளில் மூழ்கி விட்டாராம் கவுதம்.