’ பேரரசு வேணாம் மச்சான் வேணாம் நீயே நடிச்சிக்கோ’- ஆர்யா-ப்ருத்வி அலம்பல்

இயக்குனர் பேரரசுவை, தமிழ்சினிமாவிலிருந்து ஒரேயடியாக பேக்-அப் பண்ணி கேரளாவுக்கு அனுப்பியிருந்தாலும், அவர் என்ன ஆனார், அவரால் மற்றவர்கள் என்ன ஆனார்கள் ?’ என்று அறிந்துகொள்வதில் தமிழர்கள் காட்டும் ஆர்வம் அலாதியானது.

ஸோ ஹியர் கம்ஸ் த நியூஸ்.

படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையிலும், படப்பிடிப்பு எப்போது துவங்கும்? கண்டிப்பாக துவங்குமா? அல்லது இதே கண்டிஷனில் அப்படியே தூங்கிவிடுமா? என்பது போன்ற பல கேள்விக்குறிகளுடன் கால்விரித்து அமர்ந்திருக்கிறார் பேரரசுவின் ‘சன் ஆஃப் அலெக்ஸாண்டர்’.

வாட் இஸ் த ப்ராப்ளம்?

முதலில் இந்தப்படத்தின் ஹீரோவாக, அதாவது அலெக்ஸாண்டரின் மகனாக நடிக்க பேசப்பட்டிருந்தவர் ஆர்யா. படத்தின் பட்ஜெட் ரொம்பப்பெருருசு என்பதால், ஆர்யாவுக்கு கேரளாவில் அந்த அளவுக்கு பிசினஸ் இருக்குமா என்ற சந்தேகத்தோடேயே, அதே கேரக்டருக்கு பிருத்விராஜையும் பேச ஆரம்பித்தனர்.

இந்த இடத்தில் தான் ஒரு மாபெரும் காமெடி ஸ்டார்ட் ஆனது. பொதுவாக ஒரே படத்துக்கு ரெண்டு ஹீரோக்களை அப்ரோச் பண்ணும்போது, ஒரு போட்டி மனப்பான்மை ஏற்பட்டு, அந்தப்படத்தை எப்படியாவது தட்டிப்பறிப்பதற்காக, சம்பளத்தில், முன்னப்பின்ன அட்ஜஸ்ட் செய்து வேகமாக அதில் கமிட் ஆகிவிடுவார்கள்.

ஆனால் ‘சன் ஆஃப் அலெக்ஸாண்டரில் எல்லாம் தலைகீழாக நடந்தது.

பிரித்விராஜுக்கு போனைப்போட்ட ஆர்யா ,’’ மச்சான் சூப்பர் படம். முதல்ல என்கிட்டதான் பேசினாங்க. எனக்கு கொஞ்சம் கால்ஷீட் ப்ராப்ளம் வர்றதுனால ‘நீ தான் அதுக்கு சரிப்பட்டு வருவேன்னு நான் தான் உன் பேரை சிபாரிசு பண்ணேன் .மிஸ் பண்ணாம பண்ணு மச்சான்’’ என்றாராம்.

உடனே பிரித்வியோ, ‘’ வேணாம் மச்சான் வேணாம். ’அதுக்கு நீதான் சரிப்பட்டு வருவ’ நீயே அந்த கேரக்டரை பண்ணிடு. உன்ன ஒரு அதிரடியான ஆக்‌ஷன் மலையாளப்படத்துல பாக்கனுமுன்னு ஆசையா இருக்கு.’’ என்று பதிலுக்கு கலாய்த்தாராம்.

இவர்களின் உரையாடல் ஒரு முடிவுக்கு வந்து, யார் அந்த கேரக்டருக்கு சரிப்பட்டு வருவார் என்று முடிவானால் தான் தயாரிப்பாளர் தரப்பு, படப்பிடிப்புக்கே கிளம்ப தயாராகும் என்பதால், அன்னத்தை துறந்து கன்னத்தில் கைவைத்தபடி காத்திருக்கிறார் பேரரசு.