’யோஹன்; அத்தியாயம் ஒன்று’க்கு இசையமைக்கமாட்டார் ஏ.ஆர். ரகுமான்

’சமீபகாலமாக உங்கள் பொழுதுபோக்கு?’ என்று யாராவது கேட்டால் ‘சும்மா பொழுதை போக்குவது’ என்று சொல்லக்கூடிய நிலையில், செய்ய வேலைகளின்றி வெட்டியாய் பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் கவுதம்.

சரும வியாதிகளிலிருந்து ஓரளவு குணமடைந்து செயற்கை லைட் இல்லாத படங்களில் நடிக்கலாம் என்று டாக்டர்களிடம் கிரீன் சிக்னல் பெற்ற கவுதமின் நாயகி சமந்தா, எப்படியிருந்தாலும் நாக சைதன்யாவுடன் நடித்துவரும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ மற்றும் நடிகர் சித்தார்த்துடன் பெயர் சூட்டப்படாத ஒரு படம் என்று இரண்டு தெலுங்குப்படங்களை முடித்துவிட்டே ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்துக்கு வரக்கூடிய சூழ்நிலை.

இதனால் மனம் வெறுத்துப்போன கவுதம், படம் தாமதமாவதை மறக்கடிப்பதற்காக ஏற்கனவே பாடப்பட்ட பாடலை யுவன் ஷங்கர் ராஜாவை அழைத்து மீண்டும் பாடவைப்பது, அதை வரும் ஞாயிற்றுக்கிழமை யூ டூப்பில் ஏற்றுவதை ஒரு விழாவாக்குவது, யூ டூப்பில் முதல் விசிட்டராக வரும் ரசிகர் வீட்டில் லஞ்ச் சாப்பிடுவது, நூறாவது விசிட்டரை பெஞ்ச் மேல் ஏற்றி பிரைஸ் தருவது,ஆயிரமாவது விசிட்டருக்கு அவரது வீட்டு வாசலில் போய் ஆரத்தி எடுப்பது என்று வரிசையாக மூன்று மாதங்களுக்கு திட்டமிடல்கள் வைத்திருக்கிறார்.

இப்படி, பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்ட கதையாக, ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கவுதம் ‘ நீ எ பொ. வசந்தம்’ படத்துக்கு கிளப்பிவிட்ட பப்ளிசிட்டிகளை, அவரது முந்தைய மற்றும் அடுத்த பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவ்வளவாக ரசிக்கவில்லையாம்.

எனவே ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி, போனால்போகிறதென்று இசையமைப்பதாக இருந்த கவுதம் விஜய் கூட்டணியின் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படத்துக்கு எக்காரணம் கொண்டும் இசையமைப்பதில்லை என்று திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டாராம்.

இனி எதிர்காலத்தில் ‘யோஹன்’ குறித்து கவுதம் பேட்டிகள் தரும்போது தனது பெயரை சொன்னால் ரகுமான் தரப்பிலிருந்து கடுமையான மறுப்புகள் தெரிவிக்கப்படக்கூடும் என்று புயல் எச்சரிக்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.