பார்ப்பவர்களை அரளவைக்கும் பூஜா ‘காந்தி’யின் அரைநிர்வாணம்

பிரபு சாலமன் இயக்கத்தில் கரணுடன்’கொக்கி’ அர்ஜுனுடன் ’திருவண்ணாமலை’ படங்களில் நடித்த பூஜா காந்தியை ஞாபகமிருக்கிறதா?’

தமிழில் மார்க்கெட் அவ்வளவாக எடுபடாமல், தற்போது ஒரேயடியாக தனது தாய்மொழியான கன்னடாவில் செட்டிலாகிவிட்ட காந்தி, லேட்டஸ்டாக அண்ணல் காந்தி பாணியிலேயே அரைநிர்வாணமாக நடித்து கன்னட திரையுலகையே கலக்கிவருகிறார். அந்தப் படத்தின் பெயர் ‘தண்டுபால்யா’.

80 களில் பெங்களூரையும்,அதன் சுற்றுவட்டாரத்தையும் பீதிக்குள்ளாக்கிய சமூக விரோதக்கும்பல் ஒன்றைப்பற்றிய உண்மைக்கதையான இதில், பார்ப்பவர்கள் கதிகலங்கும் லட்சுமி என்ற கிரிமினல் வேடத்தில் நடித்துள்ள பூஜா காந்தி, படத்தில் பீடி பிடிப்பது, சாராயம் குடிப்பது, மற்றும் பல டாப்லெஸ் காட்சிகளில் அனாயசமாக நடித்துள்ளார்.

பூஜாவின் அரைநிர்வாணத்தை அனைவரும் ரசித்துவிடக்கூடாதே’ என்கிற குறுகிய நோக்கத்துடன் செயல்பட்ட, சில சமூக விழிப்புணர்வு கும்பல்களின் எதிர்ப்பையும், தியேட்டர் மறியல்களையும் மீறி, கன்னடத்தில் கடந்த மாதம் ரிலீஸான இந்தப்படம், ஒரு சில விரசமான காட்சிகள் தவிர்த்து, பொதுவாக விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது.

’அண்ணல் காந்திக்கு அடுத்த படியாக அரைநிர்வாணம் பூஜா காந்திக்கு மட்டுமே மிக பொருத்தமாக உள்ளது’ என்ற நக்கல்களுக்கும் குறைச்சல் இல்லை.

இப்படி கிடைத்த பரபரப்பு காரணமாக, இதன் தெலுங்கு டப்பிங் பதிப்பு விரைவிலேயே ரிலீஸாக உள்ள நிலையில், தமிழிலும் வாங்கி ரிலீஸ் பண்ணலாமா என்று சிலர் முயற்சித்து வருவதாகத்தெரிகிறது.

படத்தை தமிழ்ல ரிலீஸ் பண்றப்ப, பூஜா காந்தி’ன்னு பூஜாவை சின்ன எழுத்துகள்லயும் ‘காந்தி’யை பெரிய எழுத்துகள்லயும் போட்டா படம் சூப்பர் ஹிட்டாக சான்ஸ் இருக்குங்கோ’.