அனுஷ்கா உனக்கா, எனக்கா, தனுஷ்கா?’ -’என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?’

ans

‘’நான் பல்லாயிரக்கணக்கான மைல்கள் தள்ளி படப்பிடிப்பில் இருப்பதால், அனுஷ்காவை வைத்துக்கொண்டு படப்பிடிப்பு நடத்தாமல், கோலி விளையாடிக்கொண்டு பொழுதுபோக்குவது போல் சிலர் என்னை சித்தரித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்னை வந்ததும் அவர்கள் முகமூடியைக் கிழிப்பேன்’’ என்று நறநறவென்று

பல்லைக்கடிப்பவர் சாட்சாத் செல்வராகவன்.

‘சகுனி’க்கு சங்கூதிவிட்டு அடுத்து ‘அலெக்ஸ் பாண்டியனை’ ‘முடிக்க’ காத்திருக்கும் கார்த்தி,சுராஜ் அண்ட் ஞானவேல் anushka-1ராஜா கோஷ்டி, அக்கா சும்மா இருந்தபோதே அவரை பக்காவாக பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டு,இப்போது அவசர சிகிச்சைப்பிரிவு நோயாளிபோல், சில வாரங்களாகவே அனுஷ்காவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

கடந்த ஜூன் மாத இரண்டாம் வாரத்தில் ஜார்ஜியாவில் துவங்கிய செலவராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனுஷ்காவோ, தனது படப்பிடிப்பு எப்போது முடியும் என்பதைக்கூட தெரிந்துகொள்ள விரும்பாமல் செல்வாவுடன் ஜெள்ளாகிவிட்டார்.

இதுகண்டு கடுப்பான சகுனிவேல்ராஜா, ‘ஜார்ஜியாவின் க்ளைமேட்டை காரணமாக சொல்லிக்கொண்டு செல்வராகவன் அங்கே வெட்டியாக ஓ.பி. அடித்துக்கொண்டிருக்கிறார். anushka-2இதனால் அனுஷ்காவின் கால்ஷீட் அநியாயமாக வேஸ்ட்டாகிறது’ என்று ’இரண்டாம் உலகம்’ பற்றி, பத்திரிகையாளர்கள் மூலம் நாலாம் உலகம் முழுக்க நாறடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த வதந்திகளை கேட்டு கடுப்பான செல்வா, படத்தில் வருகிறதோ இல்லையோ, ஷெட்யூலை இப்போதைக்கு முடிக்கும் எண்ணமின்றி, ‘அலெக்ஸ் பாண்டியனுக்கு’ லேட்டாக அனுப்புவதற்காகவே தொடர்ந்து காட்சிகளை சுட்டுத்தள்ளிக்கொண்டிருக்கிறாராம்.

மேற்படி இரு கோஷ்டிகளும் ’ அனுஷ்கா உனக்கா, எனக்கா’ என்றபடி தயாரிப்பாளர் சங்கத்தில் கட்டி உருளும் நாள், ஜார்ஜியா அளவுக்கு வெகு தூரத்தில் இல்லை.

அப்படியே இந்தப் பஞ்சாயத்துக்குள்ள நம்ம தனுஷையும் எப்பிடியாவது உள்ள இழுத்துவுட்டீங்கன்னா மேட்டருக்கு ஒரு நல்ல டைட்டில் வைக்க வசதியாயிருக்கும்.

anushka-4