விண்வெளியில் பறக்கப் போகும் பிராஞ்சலினா ஜோடி

ஸ்பெஷல் விமானம்

சினிமாவிலல்ல. நிஜமாகவே. அமெரிக்காவில் இருக்கும் விர்ஜின் கேலக்டிக் என்கிற விண்வெளி ட்ராவல்ஸ்(?!) கம்பெனி பயணிகளை விண்வெளிக்கு

டூர் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஜெட் விமானம் ஒன்று ஆறு பயணிகளை விண்வெளிக்கு அதாவது தரையிலிருந்து சுமார் 100 கி.மீட்டர் உயரத்திற்கு (பயணிகளின் ஜெட் விமானங்கள் சாதாரணமாக 15 கி.மீ உயரத்தில் தான் செல்லும்) கொண்டு செல்லும். அங்கே பூமியின் ஈர்ப்பு விசை இல்லாததால் பயணிகள் விண்வெளியில் மிதப்பார்கள்.

இந்த ஸ்பெஷல் ஜெட் விமானத்தை தரையிலிருந்து 15 கி.மீ உயரத்திற்கு இன்னாரு சாதாரண பெரிய விமானத்தில் தூக்கிச் சென்று அங்கிருந்து மேலே பறக்க விடுவார்கள்.

இப்படி மேலே பறந்து விண்வெளியை சும்மா எட்டிப் பார்த்து விட்டு வர கட்டணம் எவ்வளவு தெரியுமா ? ஜஸ்ட் ஒரு கோடி ரூபாய் தான். ஒரு ட்ரிப்புக்கு.

பிராஞ்சலினா - 1

விர்ஜின் காலக்டிக் கம்பெனியின் நிறுவனரான ரிச்சர்ட் பிரான்சனும் அவரது மகன்களும் பறப்பவர்கள் பட்டியலில் முதலாவதாக இருக்கிறார்களாம். இதுவரை 500 பேர் முன்பதிவு செய்துள்ள இந்த ஜாலி ட்ரிப்பில் பிராஞ்சலினா ஜோடியும் உள்ளார்களாம்.

ஸ்பெஷல் விமானம் - 2

ஏஞ்சலினா முதன் முதலாய் பறக்கும் ட்ரிப்பிலும், பிராட் பிட் இரண்டாவது ட்ரிப்பிலும் செல்ல இருக்கிறார்களாம். இது உண்மையா ? இல்லை விளம்பரத்துக்காக சொல்லப்பட்டதா ? தெரியவில்லை. பிராட் பிட்டும், ஏஞ்சலினா ஜோலியும் இது பற்றி எதுவும் இதுவரை சொல்லவில்லை.

ஸ்பெஷல் விமானம்3

ஊட்டி, கொடைக்கானலுக்கே விழி பிதுங்கும் மத்திய தர வாழ் பிராணிகளான நமக்கு அந்தப் எட்டாத பயணம் எப்படி இருக்கும் என்று சும்மா தெரிந்து கொள்ள ஆசை வரக்கூடாதா என்ன ? விர்ஜின் காலக்டிக் இது பற்றி வெளியிட்டிருக்கும் இந்த அனிமேஷன் வீடியோவைப் பாருங்கள்.