ஹாலிவுட்டில் மிகவும் வெறுக்கப்படும் பெண்

கிர்ஸ்டன் ஸ்டீவர்ட் - 1

அது வேறு யாருமல்ல, ‘ட்விலைட் சாகா(Twilight Saga)’ ‘பேனிக் ரூம்(Panic Room)’ படங்களில் நடித்த கிர்ஸ்டன் ஸ்டீவர்ட்(Kirsten Stewart) தான்.

ஹாலிவுட்டில், அமெரிக்காவில் அதிகம் இருக்கும் நடிகர் ராபர்ட் பெட்டின்சனின்(Robert Pattinson) பெண் ரசிகைகள் இனி கிர்ஸ்டன் நடிக்கும் படங்களைக் கண்டிப்பாக பார்க்க மாட்டார்கள்

என்று சன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

விஷயம் இது தான். 2008ல் ட்விலைட் சாகா படத்தில் கிர்ஸ்டனும், ராபர்ட்டும் ஜோடியாக நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.

பத்திரிக்கைகள் இவர்களின் காதலை துப்பறிந்து பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டு வந்த போதிலும் இருவரும் அதை ஆமோதிக்கவே இல்லை.

இது பற்றி ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கும் போது கூறிய கிர்ஸ்டன் “என் வாழ்க்கையைப் பற்றி தெரிய நீங்கள் சும்மா இண்டெர்நெட்டில் கூகுள் செய்தாலே போதும். ஆனால் எனக்கு மட்டுமான வாழ்க்கை என்னுடையது. நான் சுயநலம் நிரம்பியவள். அதனால் எதிர்காலத்தில் நான் திருமணம் செய்து குழந்தை பெற்றால் கூட அக்குழந்தையின் பெயரை உங்களுக்கு(பத்திரிக்கைகளுக்கு) நீண்ட நாட்கள் சொல்லமாட்டேன்.” என்று கொதித்தெழுந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா வீக்லி என்கிற பத்திரிக்கை கிர்ஸ்டனும் அவர் தற்போது நடித்து வரும் ‘ஸ்னோ ஒயிட் அண்ட் ஹன்ட்ஸ்மேன்’ என்கிற படத்தின் இயக்குநர் ரூபர்ட் சேண்டர்ஸூம்(Rupert Sanders) ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்ததை படம் பிடித்து வெளியிட்டு விட்டது.

ராபர்ட்டுக்கு அவர் செய்து வரும் துரோகம் இவ்வாறு வெளியானதால் அவருக்கும் ராபர்ட்டுக்குமிடையே இதுநாள் வரை இருந்தகிர்ஸ்டன் - ராபர்ட்உறவும் இப்போது அது முறிந்ததும் தெரிய வந்துள்ளது. கிர்ஸ்டன் பத்திரிக்கைகள் வாயிலாக ராபர்ட்டுக்கு பொது மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார்.

மன்னிப்புக் கடிதம் எழுதினாலும், கிர்ஸ்டனின் இந்த நடத்தையால் கொதித்துப் போன ராபர்ட்டின் ரசிகர்களும், பெண் ரசிகைகளும் கிர்ஸ்டன் நடிக்கும் படங்களை இனி புறக்கணிப்பார்கள் என்ற பேச்சு அடிபடுவதால் அவருடைய சினிமா வாழ்க்கைக்கு பெருத்த பின்னடைவு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
(இதைப் படித்ததும் உங்கள் நினைவுக்கு சிம்பு, தனுஷ், பிரபுதேவா மற்றும் நயன்தாரா வந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல).

கிர்ஸ்டன் - 2

கிர்ஸ்டன் - சாண்டர்ஸ்