ஸ்டெல்லோன் - சேஜ் 1

சில்வஸ்டர் ஸ்டெல்லோன் ‘பர்ஸ் ப்ளட்’ மற்றும் ‘ராக்கி’ வரிசைப் படங்களினால் உலகெங்கும் பிரபலமானவர்.

இவருக்கும் இவரது முதல் மனைவி சாஷா(Sasha) விற்கும் பிறந்த முதல் மகன் சேஜ் மூன் ப்ளட் ஸ்டெல்லோன்(Sage Moonblood Stallone) கடந்த 13ம்

தேதி தான் வசித்த அபார்ட்மெண்டில் இறந்து கிடந்தார். அவரது படுக்கையருகே மாத்திரை பாட்டில் கிடந்தது. அதிக அளவு வலி மாத்திரைகளை உட்கொண்டதால் அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முப்பத்தி ஆறே வயதான சேஜ் இறந்ததும் பத்திரிக்கைகள் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொல்ல, ஸ்டெல்லோனின் உறவினர்கள் சிலரும் அவதூறாகப் பேட்டி கொடுக்க அவரது மகனின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது.

சேஜ் போதைப் பழக்கத்துக்கு அடிமையானார் என்றும், மன உளைச்சலில் வாழ்ந்த அவர் கடைசியாக தனது தந்தை, தாய் யாரும் தன்னிடம் போனில் கூடப் பேசுவதில்லை என்று வருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று பத்திரிக்கைகள் எழுதியிருக்கின்றன. ஆனால் அவரது படுக்கையருகே தற்கொலைக் குறிப்பு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

ஸ்டெல்லோன் - சேஜ் 11

சேஜின் தாயார் சாஷா ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியொன்றில் சேஜ் பல் மருத்துவரிடம் சென்று தொடர்ச்சியாக ஐந்து பற்களைப் பிடுங்கினார் என்றும், அதற்காக வலி போக்கும் மாத்திரைகளை உட்கொண்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார். தான் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் பல பற்களைப் பிடுங்க வேண்டாம் என்று கூறியதாகவும், இது போன்று ஒரே நேரத்தில் பல பற்களைப் பிடுங்கி சரிசெய்யும் முயற்சியில் பல பேர் இறந்திருப்பதாக தான் கேள்விப்பட்டேன் என்று கூறி அவரைத் தடுத்ததாகவும் கூறியுள்ளார்.

சேஜின் வழக்கறிஞரும், சேஜ் ஒரு நாளும் போதைப் பொருட்கள் உபயோகித்ததில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இதையொட்டி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்டெல்லோன். அதில் “ஒரு பெற்றோர் தனது குழந்தையை இழக்கும் போது பெறும் வலி அளவிடமுடியாதது. எனவே இக்கணத்தில் இறந்த எனது மகனின் நினைவுகளுக்கு மதிப்பளியுங்கள்; அவனை இழந்து வாடும் அவனது தாய் சாஷாவுக்காக வருந்துங்கள். இந்த துன்பமான இழப்பு எங்களின் வாழ்நாள் முழுதும் நிழலாக படிந்திருக்கும். சேஜ் எங்களது முதல் குழந்தை. எங்கள் சிறு உலகின் நாயகனாக அவனே இருந்தான். உங்கள் எல்லோரையும் அவனது ஆன்மாவையும், நினைவுகளையும் அமைதியாய் இருக்க விடும்படி கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார்.

ஸ்டெல்லோன் - சேஜ் 2

சேஜின் இறுதி ஊர்வலத்திற்கு மலர்வளையம வைக்க விரும்புபவர்கள் மலர்களுக்குப் பதிலாக ‘ஆட்டிசம் ஸ்பீக்ஸ்’ என்கிற ஆட்டிசம் நோயாளர்கள் காப்பகத்துக்கு நன்கொடைகளாகத் தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். (சேஜ் ஸ்டெல்லோனின் உடன் பிறந்த தம்பியான சீயர்ஜியோ ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்).

ஸ்டெல்லோன் - சேஜ் 4

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.