பிரபு தாராவுக்கும் நயன் தேவாவுக்கும் தற்செயலாக நடந்த காதல் விபத்துக்கள்

பிரபுதேவாவை வெறுப்பேத்தும் ஒரே நோக்கத்தில் மட்டும், சிம்புவுடன் நெருக்கமாக ஹைதராபாத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நயன் தாராவை, மறுபடியும் தீவிரமாக காதலிக்கத் துவங்கிவிட்டாராம் நம்ம வம்புத்தம்பி சிம்பு.

தனது ரீ-எண்ட்ரி ஓஹோவென்று இருக்கும் என்ற கற்பனை தவிடுபொடியானதைத் தொடர்ந்து, வம்புத்தம்பி மாதிரியான ஆட்களுடன் இணைத்து சில வம்புதும்பான செய்திகள் வந்தால் மட்டுமே இண்டஸ்ட்ரியில் மார்க்கட் சூடுபிடிக்கும் என்ற கணக்குடன் மறுபடியும் இணைந்து நடிப்பது என்பதுவரை முடிவெடுத்துவிட்டாராம் நயன்.

நயனின் கதை இப்படி ஒரு லயனில் போய்க்கொண்டிருக்க, அவரது முன்னாள் காதலன் தாடிதேவா மும்பையில் குடியேறியதிலும் யாரும் அறியாமல் ஒரு கேடி வேலையை செய்திருக்கிறார்.

நீங்களோ நானோ ஒரு புது ஊரில் குடியேறினால், அதே அபார்ட்மெண்டில் பரவை முனியம்மா மாதிரி ரிடையர்ட் வயசு பாட்டிகள்தான் பக்கத்து வீட்டுக்காரர்களாக கிடைக்கிறார்கள்.

ஆனால், தற்செயலாக சமீபத்தில் மும்பையின் லோகாவந்த் ஏரியாவின் ஒரு ப்ளாட்டை விலைக்கு வாங்கி குடியேறிய பிரபுதேவா, தற்செயலாக முதல் நாளன்று பக்கத்து ஃப்ளாட்காரரிடம் நம்மை அறிமுகம் செய்துகொள்வேமே என்று தற்செயலாக பெல்லடித்தால் வீட்டிலிருந்து அதே தற்செயலாக வெளியே வந்தவர் சாட்சாத் நம்ம ‘போக்கிரி’ அசின்.

அப்படியே இருவரும் ஆச்சரியத்தின் எவரெஸ்டுக்குப்போய்’ வா…ட் எ சர்ப்ரைஸ் ‘ என்றபடி தன்னைமறந்து கட்டிப்பிடித்துக்கொண்டார்களாம்.

இத்தனை தற்செயல்களை ஒருசேரப்பார்க்கும்போது நமக்கு என்னவோ ‘நடிகன் என்று மாறியாச்சி. பவுடர் பூசிப்பூசி கூச்சம் போச்சி’ என்ற நம்ம இசைஞானியின் பாட்டுதான் ஞாபகம் வந்து தொலைக்கிறது.