ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஷங்கர் இயக்கிவரும் ‘ஐ’ த பொய் படத்தின் பிடிப்பு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் வேலையில், பட நாயகி எமி ஜாக்‌ஷனால் ஏகப்பட்ட இம்சைகளை சந்தித்து வருகிறார் ஷங்கர்.

நாம் சரவணபவனுக்கு சென்று காபி சாப்பிடுவதைப்போல, சர்வசாதாரணமாக பாருக்குச்சென்று மது அருந்தும் வழக்கம் கொண்ட எமி ஜக்‌ஷன், முதல் நாள் அடித்த ரவுண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு நாளும் ஒரு முகத்தோற்றத்தோடு வருவதால் மூடு அவுட் ஆகிப்போன படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ,ஷங்கரிடம் புலம்ப, வெளிநாட்டுப்பொண்ணை எப்படி மிரட்டுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தாராம் ஷங்கர்.

சரி, இதில் வறட்டு கவுரவம் பார்ப்பானேன். எமியை தமிழுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் எல். விஜயிடமே, ‘இவளை எப்படி கையாள்வது என்று ‘ஐ’டியா கேட்போமே என்று செல்போனை சுழற்றினால், ’உங்க யூனிட்ல இருக்க வி’ ல ஆரம்பிச்சி ‘ம்’ல முடியிற நாலெழுத்து அக்ரம் நடிகரை கண்ட்ரோல் பண்ணுங்க. எல்லாம் சரியாப்போகும். தினமும் பாருக்கு அவளை அவர் தள்ளிட்டுப்போறதை இந்தப்பாரே அறியுமே’ என்று பதிலளித்தாராம்.

‘அடப்பாவிகளா இதுக்கு முந்தி முன்னப்பின்ன கூட பாக்காத மாதிரி ஆக்ட் பண்ணுனவனா தினமும் பாருக்குத்தள்ளிட்டுப்போறான்? என்று தன்னை அந்நியனாக உண்ர்ந்த ஷங்கர், தனது உதவி இயக்குனர்கள் மூலம் மேட்டரை கசிய விட்டு மீட்டரை குளோஸ் பண்ணினாராம்.

அந்த அம்பியின் பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், வட இந்திய இணையதளம் ஒன்றில், சமீபத்தில்’ஷங்கரின் ஐ’ படத்து நாயகி’ என்று வெளியிடப்பட்ட எமி ஜாக்‌ஷனின் முழு நிர்வாணப்படங்கள் ஷங்கரை அப்படியே ஸ்தம்பிக்க வைத்துவிட்டதாம்.

அவை எமி நடிக்க வருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவைதான் எனினும், இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது, பட ரிலீஸ் சமயத்தில் தமிழ் இணையதளங்களில் வெளியிடப்பட்டால், எமியின் மானத்தோடு ‘ஐ’ படத்தின் மவுசும் கப்பலேறாதா? என்று கவலைபடுறேண்டா சகோதரா ஆகிவிட்டார் ஷங்கர்.

எனவே எனிமொமண்ட் ஷங்கரிடமிருந்து ஒரு ‘பாம்’ செய்தியை எதிர்பார்க்கலாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.