கோடம்பாக்கத்தின் தட்பவெப்ப நிலைகள், வானிலை அறிக்கைகளை விட மோசமாக அடிக்கடி மாறுவதால், அதை உடனுக்குடன் தெரிந்துகொள்ள விரும்பும் அன்பர்கள், நமது வானிலை அறிக்கை வாசிக்கும் ரமணாவை, அரசுவேலை ரிடையர்மெண்டுக்கு அப்புறம் ‘லவ்வர்ஸ் கோடம்பாக்கம்.காமில் வேலைக்கு அமர்த்திக்கொள்வது நல்லது.

கடந்த சில தினங்களுக்கு முன்புவரை காதலில், லேசாக ஒரு யூ டர்ன் அடித்து மீண்டும் நயன் தாராவுடன் பயணமாகிக்கொண்டிருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்ட ‘வேட்டைமன்னன் என்ற வாலு’ என்ற ‘ சிம்பு, இப்போது முழுமூச்சாக டாலு’ ஹன்ஷிகா மோத்வானியிடம் ஐக்கியமாகிவிட்டார் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

கடந்த வாரம், வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட ஹன்ஷிகாவின் பிறந்த நாளுக்கு மும்பை பறந்து போன சிம்பு, அவர் வீட்டில் குழுமியிருந்த பாய் ஃப்ரண்ட்ஸ் கூட்டத்தைப் பார்த்து ஆரம்பத்தில் சற்றே ஜெர்க் ஆகிப்போனாராம்.

ஆனால் ஆயிரம் பேர் இருந்தாலும் ஃபிகர்களை கரெக்ட் பண்ணுவதில், நம்ம ‘மன்மதனை யாராவது அடித்துக்கொள்ளமுடியுமா?

‘’ அடியே வாலு, இதைக்கேளு, உன் பர்த்டேவுக்கு நான் ஒரு சின்ன சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். ஆனா நீ மட்டும்தான் என்கூட தனியா வரனும். ஓ.கே?’ என்றபடி ஒரு பிரத்யேக ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்து ஒரு தீவுக்கு அழைத்துச்சென்று, ஹன்ஷுவை திக்குமுக்காட வைத்தாராம்.

சிம்புவின் இந்த வம்பான அன்பில் வசியமான ஹன்ஷிகா, மற்ற பாய் ஃப்ரண்ட்ஸ்களை மறந்து இப்போதெல்லாம் ஒன்லி சிம்புவே சரணம் என்று அலைகிறாராம்.

இந்த நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, ஹன்ஷிகாவை சென்னையிலேயே செட்டில் ஆகச்சொல்லியிருக்கும் சிம்பு, புரோக்கர்கள் மூலம் ஈ.சி.ஆர் ரோட்டில் ஹன்ஷிகாவுக்காக ஒரு தனி பங்களா தேடிக்கொண்டிருக்கிறாராம்.

ஈ.சி.ஆர் ரோட்டுல பங்களா வச்சிருக்க பங்களிங்க, யாராவது நம்ம தம்பி சிம்புவை காண்டாக்ட் பண்ணுங்க. சாவியைக்குடுங்க. அப்புறமா சாக்லேட் எடுங்க. வாழ்க்கையை கொண்டாடுங்க.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.