கிளியார் பதில்கள் : நயன்தாரா ‘இடத்தை’ பிடிப்பாரா ஸ்ருதி?

நமீதாவும் சோனாவும்

கே:‘மாற்றான்’ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை திடீரென்று மலேசியாவுக்கு மாற்றிவிட்டாரே கே. வி.ஆனந்த்?’ சவுந்தர் ராஜன், திருவண்ணாமலை.

கி: தனது கருவில், பத்து மாதம் சுமந்து பெற்ற இரட்டைப்பிள்ளைகளை, திருட்டு டிவி.டி. என்னும் மாற்றாந்தாயிடமிருந்து திருடிக்கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் தமிழர்கள் மீது, குறிப்பாக, தமிழ்ப்பத்திரிகையாளர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஆனந்த்.

இதையொட்டியே ஆடியோ ரிலீஸையே மலேசியாவுக்கு மாற்றிய ஆனந்த், விரைவில் தமிழ்ப்பட உலகை விட்டே வெளியேறி, வேறெங்காவது தனது யூனிட்டோடு செட்டிலாகிவிடலாமா என்று யோசித்துவருகிறாராம்.
போறப்ப பேட்டா, கன்வேயன்ஸெல்லாம் மறக்காம கேட்டு வாங்கிட்டுப் போயிடுங்க சார்.

கே: பிரபுதேவா டைரக்‌ஷனில் இந்திப்படத்தில் நடிப்பதால், ஸ்ருதி, நயன் தாரா இடத்தைப்பிடிக்க வாய்ப்பிருக்கிறதா குருவியாரே ’நடிப்பில்’? மதன், சிவகங்கை.

கி: வெடிவச்சி எழுதினாலே ,’வெரி தேங்க்ஸ்னு’ கிசுகிசுக்களுக்கு நன்றி சொல்ற இந்தக்காலத்துல, இன்னும் கூட பொடி வச்சி கேள்வி கேக்குற அளவுக்கு அப்பாவியா இருக்கீங்களே மதன்?.
நடிப்புல மட்டும் இல்ல, மாஸ்டரோட மனசுலயும் ஸ்ருதி, நயன் தாராவோட இடத்தை புடிக்கத்தான் போறாங்க. ஏன்னா ஸ்ருதி-1நடனத்துக்கு அப்பிடி ஒரு காந்த சக்தி இருக்கு. வெயிட் அண்ட் ஸீ.

கே: திருவாளர் ‘ஈ’யெல்லாம் ஹீரோவா நடிச்சிட்டாரு. உனக்கு அப்பிடி எதுவும் வாய்ப்பு கிடைக்கலையா கிளியாரே?’ கணேஷ், மும்பை.

டைரக்டர் லிங்குசாமி கூப்பிட்டாக, கவுதம் மேன்னும் கூட ஒரு கதை பறஞ்சாக. ராஜமவுலியோட அசிஸ்டெண்டுன்னு சொல்லிக்கிட்டு ஒரு நாலஞ்சி பேரு கூட ரவுண்டு கட்டுறாக.
ஆனா குட்டோ, திட்டோ, துட்டோ எதுவாயிருந்தாலும் கமல் கையாலதான் வாங்கனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு காத்திருக்கேன். ‘விஸ்வரூபம்’ ரிலீஸுக்கு அப்புறம் எப்பிடியிருந்தாலும் என் கிட்ட கால்ஷீட் கேட்டுதான வந்தாகனும். ஆனா ஆண்டிரியாவத்தான் ஜோடியா போடனுமுன்னு அடிச்சி சொல்லிடப்போறேன்.

கே: தமிழில் த்ரில்லர் ரக படங்கள் அவ்வளவாக வருவதில்லையே?’ –தினகரன், கும்பகோணம்.

சமீபத்தில் ‘பொல்லாங்கு’ என்ற பெயரில் ஒரு தில்லாலங்கடி த்ரில்லர் வந்திருக்கிறது.
ஆனாலும் நான் சொல்ல விரும்புவது,… ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.ஸ்ருதி-2 அது ஓ.சியில் கிடைப்பதாக இருந்தாலும், ஒருவருமே,’பொல்லாங்கு’ செல்லவேண்டாம்.

கே: ‘சிலுக்கு வேடத்தில் நடிக்க துடித்த நமீதாவின் ஆசை எந்த நிலையில் உள்ளது?’ சிவபாலன், கொமாரபாளையம்.

ஆசை எந்த நிலையில் உள்ளது என்பது அடியேனுக்குத்தெரியாது. ஆனால் குறைப்பதாக சொன்ன அவரது உடல் பாஷை பார்ப்பவர்களை உலுக்கு’ம் வகையில் உள்ளது.
இந்த ஸ்டில்லைப்பாருங்க. இப்பிடியே இன்னும் ஒரு பத்து நிமிஷம் கட்டிப்பிடிச்சா சோனாவே, யாருக்கும் கிடைக்காம வீணா போயிருவாரு போல இருக்கே?

முந்தைய கிளியார் பதில்கள்…

பொல்லாங்கு