”டாப் கன்’ புகழ் இயக்குனர் டோனி ஸ்காட்(Tony Scott) தற்கொலை..

டோனி ஸ்காட் குதித்த வின்சென்ட் பாலம்

ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பையும், வசூலையும் ஒருங்கே பெற்ற ‘டாப்கன்'(Top Gun), க்ரிம்சன் டைட்(Crimson Tide), எனிமி ஆப் த ஸ்டேட்(Enemy Of the State), ‘அன்ஸ்டாப்பபிள்'(Unstoppable) போன்ற படங்களை இயக்கிய பிரிட்டிஷ் இயக்குநர் டோனி ஸ்காட் நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஞாயிறன்று மதியம் 12 மணியளவில் அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜெல்ஸ்ஸில் லாஸ் ஏன்ஜெல்ஸ் துறைமுகத்தையும் சான் பெட்ரோ நகரையும் இணைக்கும் 1500 அடி நீளமான ‘வின்சென்ட் தாமஸ் தொங்கு பாலத்’திற்கு காரில் வந்த டோனி ஸ்காட், காரை பாலத்தின் நடுவில் நிறுத்திவிட்டு பாலத்தின் 18 அடி உயர தடுப்புச் சுவர் வலையின் மீது ஏறியுள்ளார். அங்கே நின்று கொண்டிருந்த சில பார்வையாளர்கள் ஏதோ விளையாட்டு வீரர் கம்பி வலைத்தடுப்பின் மீது ஏறுகிறார் என்றெண்ணி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து 186 அடி உயரத்திலிருந்து கடலினுள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

68 வயதான டோனி ஸ்காட்டிற்கு மனைவியும்(டோன்னா), 12 வயதாகும் இரட்டையர்களான மகன்களும்(ப்ராங்க் மற்றும் மேக்ஸ்) உள்ளனர். இவர் புகழ்பெற்ற இயக்குநர் (க்ளாடியேட்டர் புகழ்)ரிட்லி ஸ்காட்டின் உடன் பிறந்த தம்பியாவார்.

அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்கிற காரணங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவரது காரிலும், அலுவலகத்திலும் அவர் விட்டுச் சென்ற மரணக் குறிப்புகளை காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். அந்தக் குறிப்புகளைப் பற்றி தகவல்களை சொல்ல காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.

கமர்சியல் ஹாலிவுட் படங்களின் அமைப்பிலும், போக்கிலும் பெறும் மாறுதல்களைச் செய்தவர் டோனி ஸ்காட். வித்தியாசமான கேமரா கோணங்கள், விறுவிறுப்பான ஸ்கிரிப்ட் போன்றவற்றில் புதுமையான விஷயங்களை முயன்று பார்த்தவர். இவரது முதல் ஹிட் படமான டாப் கன் படத்தில் தான் ‘டாம் க்ரூஸ்'(Tom Cruise) அறிமுகமானார். விமானப் படை வீரர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் நடைபெறும் கதையில் விமானத்திலேயே கேமராக்களைப் பொறுத்தி ஆக்ஷன் காட்சிகளை படமாக்கினார்.

இவரது எனிமி ஆப் த ஸ்டேட் படத்தில் அமெரிக்க சி.ஐ.ஏவில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவன் தான் செய்த கொலையை மறைக்க ஒரு சாதாரண மனிதனை நாட்டிற்கே எதிரி போல மாற்றி அவனை எப்படியெல்லாம் துரத்தி, சாட்டிலைட் மூலம் பின்தொடர்ந்து உளவு பார்த்து வேட்டையாடினான் என்று காட்டியதன் மூலம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வை அரசு டோனி ஸ்காட்நினைத்தால் எப்படியெல்லாம் உள்நுழைந்து அந்தரங்கங்களை வேவு பார்க்க முடியும் என்ற நிஜத்தை கோடிட்டார். இதைத் தொடர்ந்து அரசு குடிமக்களின் போன்களை டேப் செய்வது, பெட்ரூம்களில் கேமராக்கள் வைப்பது, பின் தொடரும் வேவு சாதனங்கள் வைத