மீண்டும் ஒரு லவ்ஸ்’ – சஹானாஸை மிஞ்சுவாரா அமலாஸ் பால்

கோவாவிலும், சாலக்குடியிலும் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துத் திரும்பியிருக்கும் சமுத்திரக்கனியின், ‘நிமிர்ந்து நில்’ படத்தில் அமலா பால் ஒரே நேரத்தில் இரண்டு பேரைக் காதலித்து நடித்தார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் செய்தி. அது படப்பிடிப்புக்கு. ஆனால் படப்பிடிப்பு முடிந்ததும் மூன்றாவதாக ஒருவரைக் காதலித்த செய்தி விரைவிலேயே பற்றி எரியப்போகிறது.

அப்படி பற்றி எரியப்போகிற இடம் இயக்குனர் ஏ.எல்.விஜயின் வயிறாகக்கூட இருக்கலாம்.

தற்போது செய்திகளில் பரபரப்பாக அடிபட்டுக்கொண்டிருக்கிறாரே சஹானாஸ், அவரையும் மிஞ்சும் அளவுக்கு காதலர்களை வைத்திருப்பவர் நடிகை அமலாபால். இவர் கல்லூரியில் படித்த காலத்திலேயே வாரத்துக்கு ஒரு பாய்ஃப்ரெண்டை மாற்றிக்கொண்டே இருப்பாராம். சினிமாவில் சொல்லவும் வேண்டுமா?.

திரையுலகில் நுழைந்த புதிதில் ஒரு மலையாள ஒளிப்பதிவாளரை தீவிரமாக லவ்ஸ் விட்டுக்கொண்டிருந்த அமலா, அடுத்து ‘தெய்வத்திருமகள்’ கமிட் ஆனதுமே, விக்ரமிடம் ஒரு சாதா லவ்ஸும், இயக்குனர் விஜயுடன் கொஞ்சம் தீவிர லவ்ஸும் விட்டுக்கொண்டிருதார்.

அந்தக்கூட்டணியினர் ‘தாண்டவத்தில்’ தன்னைப்போடவில்லை என்றதும் புட்டுக்கொண்ட அமலா, அந்த லவ்வை இப்போது ஷிஃப்ட் பண்ணியிருப்பது ‘நிமிர்ந்து நில்’ பட இயக்குனர் சமுத்திரக்கனியிடம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படத்தின் தமிழ் பதிப்புக்காக ஜெயம் ரவியையும், தெலுங்குக்காக நடிகர் நானியையும் கேமராவுக்கு முன்னால் காதலிக்கும் அமலாஸ், பேக் அப் ஆனதும் மறுநாள் படப்பிடிப்பு தொடங்கும் வரை சமுத்திரக்கனியுடன் சங்கமமாகி விடுகிறாராம்.

கோவா பீச்சு முழுக்க,இவர்களது காதல்தான் ஒரே பேச்சு.

கோவாவில் படப்பிடிப்பு தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே இந்த சங்கம சங்கதி யூனிட் முழுக்க பரவிவிடவே, நிமிர்ந்து நிற்கவேண்டிய இயக்குனர் தளர்ந்து செல்வதாக டாக்கோ டாக்.