விஜய் அண்ட் விஜய் கோஷ்டிக்கு நோஸ்கட் விட்ட ஸ்ருதிஹாஸன்

aish2

சென்னையை முற்றிலும் மறந்து, மும்பையில் பிரபுதேவா இயக்கிவரும் இந்திப்படத்தில் புதுமுக ஹீரோ கிரிஷுடன் நடித்துவரும் ஸ்ருதிஹாசன், இரு தினங்களுக்கு முன் ரவிதேஜாவுக்கு ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்திலும் ஒப்பந்தமானாராம்.

இந்தச்செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அண்ட் அதிர்ச்சி அடைந்தவர்கள் விஜய் அண்ட் விஜய்.

ஸ்ருதி தெலுங்குப்படத்தில் கமிட் ஆவதற்கும், ஜான்சன் அண்ட் ஜான்சன் மாதிரி, இரு விஜய்கள் அதிர்ச்சி அடைவதற்கும் என்ன சம்பந்தம்?

விசயம் இருக்கிறது. ‘யோஹன் அத்தியாயம்-1’ லிருந்து விஜய் கழண்டு கொண்டவுடன், நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்க கமிட் ஆகியிருப்பவர், சொந்தமாக கதை எழுதி மட்டுமே படங்களை இயக்கிவரும் இயக்குனர் விஜய்.

இவரிடம் அடுத்த படத்துக்கான ‘டிவி.டி.யை வாங்கிக்கொண்டு, குத்துமதிப்பாக கதைகேட்ட விஜய், ‘நம்ம கதைக்கு ஸ்ருதி ஹீரோயினா பண்ணினா நல்லா இருக்குமே. கேட்டுப்பாருங்களேன்’ என்று ஏழாம் அறிவுடன் ஒரு ஐடியா கொடுத்தாராம்.

அதற்கு ஆமாஞ்சாமி போட்ட இயக்குனர் விஜய், ஸ்ருதியிடம் மேட்டரைச்சொல்லி கதை சொல்ல நேரம் கேட்க, ஸ்ருதியோ, ‘’நான் இப்ப பிரபுதேவா படம் தவிர எதுவும் நடிக்கிறதா இல்லை. அதுவுமில்லாம முதுகுல பச்சை குத்திக்கிறது மற்றும் என்னோட இசை ஆல்பத்துல மும்முரமா இருக்கேன். தப்பா எடுத்துக்க வேணாம்னு விஜய் அங்கிள் கிட்ட சொல்லிடுங்க’’ என்றாராம்.

‘என்னது விஜய் அங்கிளா,அங்கிளா,அங்கிளா’ என்று ஏழெட்டு எக்கோ ஒலிகளுடன் அதை உலாவ விட்ட இயக்குனர் விஜய், அங்கிள் மேட்டரை மட்டும் எடிட் பண்ணிவிட்டு, மீதியை விஜயிடம் சொன்னாராம்.

நமக்கு கால்ஷீட் குடுக்க மறுத்துட்டு, இப்ப ரவிதேஜா படத்துல நடிக்க ஒத்துக்கிறது எந்த ஊர் நியாயம் என்று புலம்பித்தவிக்கிறது ஜான்சன் அண்ட் ஜான்சன் கோஷ்டி.