’மாற்றான்’ தயாரிப்பாளருடன் மல்லுக்கட்டிய கே.வி. ஆனந்த்

பிரியாமணி நடித்த ‘சாருலதா’வின் ரிசல்ட், சூர்யா, கே.வி. ஆனந்த் கோஷ்டிகளை ரொம்பவே உற்சாகப்படுத்தியிருக்கிறது. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் ‘சாரு’ மாற்றானின் முன் மண்டியிட்டு வணங்கவேண்டும் என்பது ‘மாற்றான்’ யூனிட்டில் வேலை பார்த்தவர்களின் கருத்து.

ஆனால் ‘மாற்றான்’ படம் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் வேலையில், தயாரிப்பாளர் தரப்புக்கும் கே.வி. ஆனந்துக்கும் இடையில் ஏகப்பட்ட மாற்றுக்கருத்துக்கள் உருவாகி, அது ஒரு மூன்று மாத கருவாகி நிற்பதாக தகவல்.

இறுதிக்கட்ட எடிட்டிங் முடிந்தபிறகு, படத்தின் நீளம் மூன்று மணிநேரம் 25 நிமிடங்களாக இருந்திருக்கிறது.’ டைட்டானிக்’கை எல்லாம் மக்கள் மூன்றரை மணிநேரம் பார்க்கவில்லையா? பட்த்தின் தொழில்நுட்ப உத்திக்காகவே இந்த நீளத்தை மக்கள் பொறுத்துக்கொள்வார்கள்’ என்பது கே.வி.யாரின் கருத்து.

’எப்படிப்பட்ட காவியமாக இருந்தாலும், படத்தை இவ்வளவு நீளமாக பார்க்கும் மன நிலையில் மக்கள் இல்லை. எனவே ஒரு மணி நேர அளவை ஈவு இரக்கமில்லாமல் வெட்டி எறியுங்கள் ‘ என்று தயாரிப்பாளர் தரப்பில் எடிட்டருக்கு சொல்லி அனுப்பப்பட்டதாம்.

இதைக்கேட்டு அப்செட் ஆன, ந்த், ‘’ நான் எடிட்டிங் ரூம் பக்கமே வரமாட்டேன். எக்கேடோ கெட்டுப்போங்க’ என்றபடி வீட்டில் முடங்கிவிட்டாராம்.

அக்டோபர் 12 ரிலீஸுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ‘மாற்றான்’ இப்போதைக்கு 2மணிநேரம் 45 நிமிடங்கள் நீளத்துக்கு இருக்கிறான்.

இதுக்குத்தான் சுடுறப்ப,சுருக்கமா,கமுக்கமா, ஒரே டி.வி.டி.யோட நிறுத்திக்கனும்னு சொல்றது.