நீங்க ‘nun’னே ஆனாலும் என்னை கைவிட்டுறாதீங்க டாப்ஸி மேடம்?’

சமீபகாலமாக நயன் தாராவுக்கு சற்றே ஓய்வு கொடுத்திருக்கும், கிசுகிசுப்பாளர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பவர் நம்ம டாப்ஸிப்பொண்ணு.

மகத்தில் துவங்கி மனோஜ் வழியாக நுழைந்து இப்போது லேட்டஸ்டாக

ஆர்யாவுடன் டாப்ஸி டாப் கியரில், ஐக்கியமாகி இருப்பதாக ஐயமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜீத்துடன் விஷ்ணுவர்த்தன் கைக்கோர்த்திருக்கும் பெயரிடப்படாத படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடிக்கும் டாப்ஸி, படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கூட, டமில் கற்றுக்கொள்கிறேன் பேர்வழி என்று ஊர்வழியாக, சதா ஆர்யாவுடன் தான் சுற்றுகிறாராம்.

இச்செய்தியை இணையதளங்களின் மூலமாக அறிந்த மனோஜ், மனதளவில் டாப்ஸியுடனான காதலை டைவர்ஸ் செய்துவிட்டு, சமீப தினங்களாக டாப்ஸியிடமிருந்து வரும் போன் கால்களைக் கூட அட்டெண்ட் பண்ணுவதில்லையாம்.

‘’ இப்பிடி என்னா ஏதுன்னே கேக்காம கன்னாபின்னான்னு கிசுகிசு எழுதுற பயலுக மட்டும் என் கையில மாட்டுனானுக, அவனுகளை சூப் போட்டு குடிக்காம விடமாட்டேன்.’ என்று உறுமும் டாப்ஸிக்கு, விஷ்ணுவர்த்தன் படத்தில் நிருபர் வேடத்தில் நடிப்பதால், அந்தப்படம் முடிந்ததும், சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பித்து தன்னைப்பற்றி கிசுகிசு எழுதிய அத்தனை பத்திரிகையாளர்களையும் பழிவாங்கும் ஒரு திட்டமும் கைவசம் இருக்கிறதாம்.

பத்திரிகையின் பெயர் ‘டாப்ஸி டாப்ஸி’.

என்னை உங்க ஆபிஸ் பாயா ‘வச்சுக்குவீங்களா’ மேடம்?’

சற்று முன்னர்: இன்று மாலையில் அடைமழை பெய்தது போல், தனக்கும் ஆர்யாவுக்குமிடையிலான காதல் செய்திகள் குவிந்ததைக்கண்டு வெறுப்பின் உச்சத்துக்கே போன டாப்ஸி, சற்று முன்னர் தனது ட்விட்டரில் இப்படி ட்விட்டியிருக்கிறார் ‘ இவர்கள் அனைவரும் இப்படி வரிந்து கட்டிக்கொண்டு வதந்திகளைக் கிளப்புவதைப் பார்த்தால் நான் சந்நியாசினி[ nun] ஆனால்தான் என்னை விட்டு வைப்பார்கள் போல் தெரிகிறது’.

மறுபடியும் கேட்டுக்கிறேன். நீங்க ‘nun’னே ஆனாலும் என்னை கைவிட்டுறாதீங்க மேடம்.